பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள் . (2) காதல் நாடகத்தின் பெருவிசைபோல் இருப்பவள் தோழி என்றும், அவள் உலகியலறிவு மிக்கவள் என்றும் முன்னர்க் கண்டோம். தோழி உரையாடுவதற்குரிய பொருண்மைகளை யெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியனார் ஒரிடத்தில் தொகுத்துக் கூறியுள்ளார். இப்பகுதியை துணுகி ஆராயின், மக்கள் மனநிலையை அவர்தம் தோற்றம் ஒழுக்கம் முதலியவற்றால் உய்த் துனரும் மனப்பயிற்சியும் ஒத்த அன்பினராகிய தலைவனையும் தலைவியையும் உலகியல் கூறித் தீதொரீஇ நன்றின்பால் உப்க்கும் கல்லறிவும், உள்ளக் கருத்தறிதல் அருமையும், தன் அறிவின் திறத்தைப் பிறரறியாது ஒழுகும் அடக்கமும், மறை புலப்படாமல் கிறுத்தும் கல்லுள்ளமும், மாசற்ற அறவுணர்ச்சியும், செய்யத் தகுவன அறிந்து கூறலும் ஆகிய பெண்மைக்குணங்கள் முழுவதும் தோழியினிடத்து ஒருங்கமைத்திருத்தல் புலனாகும். இவ்வாறு பெறுதற்கரிய பெருங்குணங்கள் யாவும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவளே தோழியெனப் பாராட்டுதற்குரியவளென்பார் தாங் கருஞ் சிறப்பின் தோழி’ என்று கூறுவர் தொல்காப்பியர். இத்தகைய தோழி, தலைவன்-தலைவியின் களவொழுக்கத்தினை அதிகமாக கீட்டிக்க விரும்பாள். பகற்குறி இரவுக்குறிகளிலும் அவர்கள் 1. களவியல் - நூற்பா 24 (இளம்.) 2. செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான. (பொருளியல் - நூற்பா 141 என்று பெண்டிர் இயல்புகளைக் கூறுவர் தொல்காப்பியர். இங்குச் செறிவு என்பது, அடக்கம். கிறைவு என்பது, மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம். செம்மை என்பது, மனக்கோட்டமின்மை: செப்பு என்பது களவின்கட் செய்யத்தக்கன கூறல், அறிவு என்பது, கன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் அறிவித்தல்; அருமை என்பது, உள்ளக் கருத்தறிதலருமை.