பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பிடம் காட்டும் வாழ்க்கை

f 2 கொடிச்சி யின்குரல் கிளைசெத் தடுக்கத்துப் பைங்குரல் ஏனல் படர்தருங் கிளியெனக் காவலும் கடியுநர் போல்வர் மாமலை நாட வரைந்தனை கொண்மே." (செத்து - அறிந்து பைங்குரல் ஏனல் - பசுமையான கதிரை புடைய தினை வரைந்தனை கொண்மே - வரைந்துகொள் வாயாக.) என்ற ஐங்குறு நூற்றுப்பாடலில் தலைமன் களவு நீட்டித்த வழித் தோழி பட்டாங்கு கூறி வரைதல் வேட்கையை உணர்த்தியதை அறிக. அகப்பொருள் விளக்க நூலார் வரைவு கடாதலைப் பொய்த்தல், மறுத்தில், கழிதல், மெய்த்தல் என்று நான்கு வகையாகப் பாகு படுத்திப் :ேசுவர், பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென்(று) ருகால் வகைத்தே வரைவு கடாதல்.' છેઃ ! என்பது அவர் கூறும் நூற்பா. இதில் பொய்த்தல் என்பது, தோழி பானவள் தலைவியைத் தலைவன் மணந்துகொள்ளும்படி செய்ய எண்ணித் தலைவனிடம் பொய்யாயினவற்றைத் தானே புனைந்து கூறுதல். மறுத்தல் என்பது, தலைவன் குறிக்கண் வருதலைத் தோழி குறிப்பாகவும் வெளிப்படையாகவும் மறுத்தல். கழறல் என்பது, தோழி தலைவனிடம் அவன் தலைவியை மனங்து கொள்ளாமல் களவின்கண் ஒழுகுதல் அவன் நாடு முதலியவற்றிற்கு எந்தது அன்றெனத் தலைவற்குக் கூறுதல். மெய்த்தல் என்பது, தோழி தலைவனுக்கு மெய்யாயினவற்றைக் கூறுதல். இவை ஒவ்வொன்றுக்கும் உரியவையாகப் பல கிளவிகளைக் காட்டுவர் அவ்வாசிரியர். அத்தோடு கிற்றல் மேற்கூறியவாறு தலைமகனை வரைந்து கொள்ளுமாறு தோழி பலபடியாக வேண்டியும், அவன் அங்ங்னம் செப்பாது களவொழுக்கத்தையே கோக்கமுடையவனாக இருப்பான். இங்கிலையில் தலைவிக்கு ஆற்றாமை கைமிக்கு ஏதம் பலவாக வந்து சேரும். இப்பொழுது அவளுக்குத் தோன்றாத் துணையாக இருக்கும் தோழி. இனி இக்களவினைத் தமர்க்கு வெளிப்படச் செய்து அவரால் குறித்த தலைவனுக்கே கொடுக்கச் செய்தல் 13. ஐங்கு று - 289. 14. கம்பி அகப்-நூற்பா 165.