பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* † 6 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற களவியல் நூற்பாப் பகுதியும் இதனைப் புலப்படுத்தும். இவ்வாறு தலைவி ஒம்படுத்துரைப்பதை, - அண்ணாத் தேக்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த கன்னெடுங் கூந்தல் கரையொடு முடிப்பினும் நீத்தல் ஒம்புமதி பூக்கேழ் ஊர!22 என்ற கற்றினைப் பாடலாலும் அறியலாம். இதுவே உடன் போக்கின் இயல்பும் வரலாறுமாகும். மேற்கூறியவாறு தலைவி உடன் செல்லத் துணியும் செயல் எவ்வெப்பொழுது நிகழும் என்பதையும் ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். - ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் பிரித ச்ேசம் உண்மை பாலும் அம்பலும் அலருங் களவுவெளிப் படுக்குமென் து அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் கோக்கொடு வக்த இடையூறு பொருளினும் போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்.28 என்ற பொருளியல் நூற்பா இதனைப் புலப்படுத்தும். இடை விடாது இன்பம் நுகர்தலோடு மனையறம் கிகழ்த்தும் உரிமையை உறுதியாக விரும்புதலானும், வினை செய்தலில் விருப்புடைய ஆண்மக்கள் பிரிவர் எனக் கருதி அஞ்சும் அச்சம் மகளிர்க்கு இயல்பாதலானும், களவொழுக்கத்தைப் புறத்தார்க்கு வெளிப் படுத்துமென்று அஞ்சும்படி தோன்றிய அம்பலும் அலரும் ஆகிய இருவகைக் குறிப்பினாலும், தலைமகனது வரவினை எதிர்நோக்கி பிருந்த கிலையில் வந்த அவனுடன் அளவளாவுதற்கு இயலாதபடி இடையூறு கேர்தலானும் உடன்போக்கும் (வரைவும்) தலைவியிடம் தோன்றும் என்பது ஆசிரியாது கருத்தாகும். இவ்வாறு ஒருவரும் அறியாவண்ணம் காதல் தலைவனுடன் தலைவி சென்ற செய்தி பிற்றைஞான்று வெளிப்பட்டதும் சுற்றத்தார், தலைவன் செயற்கு மிகவும் வெகுண்டு அவ்விருவர் செயலையும் தடுத்தற்பொருட்டுத் திரண்டு விரைக்தெழுவர். இங்கனம் இவர்கள் வெகுண்டெழுவதற்கு முன்பே, தலைவி 22. கற்றிணை - 10. - 23. பொருளியல் - நூற். 29 (இளம்.)