பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையுடைப் பேச்சு - . 12.É முறையில்-ஒழுங்கில்-வெளியாகின்றது என்பதை அறியும்போது உண்மையில் நாம் மகிழ்கின்றோம் : அந்த வரையறையைக் கண்டு. எல்லையற்ற வியப்பெய்துகின்றோம். r குறிப்பாக உண்மையை வெளியாக்கல் ஊழின் வலியால் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் களவுக்காலத்தில் அடிக்கடி சக்திப்பதற்குத் துணைபுரிபவள் தோழி. என்றாலும், தலைவன் தலைவியை மணந்துகொண்டு உலகறியக் கணவன் மனைவியராக வாழ வேண்டும் என்ற எண்ணம் தோழிபால் எப்பொழுதும் இருக் கும். களவுக்காலத்தில் தலைவனைக் காணமுடியாமல் தலைவி பிரிந்து வாழும் நேரம் அதிகமாக இருக்கும். ஒருவருக்கும் தெரியாமல் மணமாகாதார் சக்திக்கும் வாய்ப்புகள் அடிக்கடிக் கிட்டுதலும் அவ்வளவு எளிதன்து. எனவே, பிரிவை கினைந்து தலைவி. வருக்துவாள். இதனால் தலைவியின் உடல் இளைத்துப் போகும். இதைக் கண்டு தாய்மார்கள் இஃது எதனால் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று குறி பார்த்து ஆராய முற்படுவர். இத்தகைய சக்தர்ப்பங் களில் தோழி தல்ைவியின் களவொழுக்கத்தை, அவளுக்கு ஒரு. காதலன் இருக்கின்றான் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துவாள். சில சமயம் தலைவியே தன்னுடைய கரந்த ஒழுக்கத்தைத் தோழிக் குக் குறிப்பாகப் புலப்படுத்துவதுமுண்டு. தலைவி தோழிக்குக் குறிப்பாகப் புலப்படுத்துவதை இறையனார் களவியலுரையாசிரியர் இவ்வாறு குறிப்பர் : அஃதாமாறு, இயற்கைப்புணர்ச்சி புணர்க், தானும்,பாங்கற்கூட்டம் கூடியானும்தெருண்டு வரைக்தெய்தலுற்றுத் தமரை விடும் ; விட்டவிடத்து அவர் மறுப்பர், அஃது இலக் கணமாகலான். அங்ங்னம் மறுத்தவிடத்துத் தலைமகன் வேறு. படும். எம்பெருமான் மறுக்கப்பட்டமையான் மற்றொருவாறாங், கொல்லோ !” எனக் கலங்கி வேறுபடும், வேறுபாடு எய்தின பொழுதோ தோழிக்குப் புலனாம் ; புலனாயினவிடத்து, ‘எம்பெரு, மாட்டி, நினக்கு இவ்வேறுபாடு எற்றினானாயிற்று ? என்னும். என்றவிடத்து, இஃது எனக்குப் பட்டது, இன்னவிடத்து ஒரு ஞான்து யுேம் ஆயமும் தழையும் கண்ணியும் கோடற்கு; என்னிற். சிறிது ங்ேகினாயாக, ஈங்கு கின்றேன் ; ஒரு மணிச்சுனை கண்டேன்;. அம்மணிச்சுனை தான் ஆம்பலே குவளையே கெய்தலே தாமரையே என்றிப்பூக்களால் மயங்கி மேதக்கது கண்டு; வேட்கையான் ஆடுவான் இழிந்தேன் ; இழுக்கிக் குட்டம் புக்கேன்; புக்குத் தோழியோ !” என, நீ கேளாயாயினாப் ; ஆக, ஒரு தோன்றல் வந்து தோன்றி எனது துயர் நீங்குதற்காகத் தன் கை நீட்டினான் . கீட்ட, யானும் மலக்கத்தான் கின் கையெனப் பற்றினேன் ; பற்ற, வாங்கிக் கரைமேல் கிறீஇ நீங்கினான் ; நீ அன்று கவலுதி எனச் சொல்லேன் ஆயினேன்; நீ அவ்வெல்லைக்கண்ணும் கைவிடாதாப்