பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 24 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கொண்டு குறி பார்க்கின்றாள். அப்போது தோழி அருகிலிருந்த குறத்தியை நோக்கி, அகவன் மகளே ! அகவன் மகளே ! மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே ! பாடுக பாட்டே : இன்னும் பாடுக பாட்டே, அவர் கன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே." (மனவுக்கோப்பன்ன - சங்குமணி யி ன ர ல கி ய கோவையைப் போன்ற வெண்மையாகிய, ! என்று கூறுகின்றாள். தெய்வங்களை அழைத்துப் பாடிக் குறி சொல்லும் ஒரு வகைப் பெண்களை அகவன்மகளிர் என்று அக் காலத்தார் வழங்கினர். தான் கூறப்போகும் செய்தியை நன்கு கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தோழி அகவன் மகளை மூன்று முறை விளிக்கின்றாள். பாடுதற்குரிய சிறப்புடைய மலை என்று. குறிப்பீடுவதற்காகவே தோழி மீண்டும் பாடும்படி வேண்டுகின்றாள். "அவர் கன்னெடுங்குன்றம் பாடிய பாட்டு’ என்று கூறினால், "அவர் யார்?' என்ற ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மையறி வதற்கு ஏதுவாகும். எனவே, இதனால் தோழி தாயரிடம் அறத் தொடு கிழ்கின்றாள். கபிலர் பாடியருளிய குறிஞ்சிப் பாட்டில்’ (பத்துப்பாட்டில் ஒன்று) தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கும் முறைகள் மிக அழகாகக் கூறப்பெற்றுள்ளன. அதனைப் படித்து மகிழ்க. - பிறர் புலப்படுத்தும் முறை தோழி மூலம் தலைவியின் களவொழுக்கத்தை அறியும் செவிலி, கற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள்; கற்றாப் தந்தை தனையர்க்கு அறத்தொடு கிற்பாள். இவ்வாறு தலைவி, தோழி, செவிலி, கற்றாய் அறத்தொடு நிற்கும் செய்தியைக் காமர் கடும்புனல்’ என்று தொடங்கும் குறிஞ்சிக்கலிப் பாட்டு மிக நயமாகச் சித்திரிக்கின்றது. கற்றறிந்தார் ஏத்தும்’ அக்கலிப்பாட்டைப் பன்முறைப் படி த்து இன்புறுக. தலைவியின் களவு ஒழுக்கத்தைக் கேட்டவுடன் தந்தைக்கும் தனையர்க்கும் சினம் எழும்; அவ்வொழுக்கத்திற்குக் காரணமாக இருந்த தலைவன் மீது சினம் பொங்கி எழும் அவனுடன் அவர்கள் சண்டை செய்ய எண்ணுவர். பிறகு, ஆராய்ந்து இருவர்மீது குற்றம் இல்லை என்று. அமைவர். இதனை, - 4. குறுங்தொகை - 23.