பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV பதினேழாம் நூற்றாண்டில் திகழ்ந்த தாயுமான அடிகள் (கி. பி. 1608.1664) இந்தத் தருக்கப் பூசல்களையும் பிற செயல்: களையும், கல்லாத பேர்களே நல்லவர்கள் கல்லவர்கள், கற்றும்அறி வில்லாதனன் கன்மத்தை என்சொல்வேன் மதியை என் சொல்லுவேன்; கைவல்ய ஞான நீதி கல்லோர் உரைக்கிலோ கர்மமுக் கியமென்று காட்டுவேன்; கர்மம் ஒருவன் காட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று கவிலுவேன்; வடமொ ழியிலே வல்லான் ஒருத்தன் வரவும்திரா விடத்திலே வந்ததா விவகளிப் பேன்; வல்லதமி ழறிஞர் வரின் அங்ங்லே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்; வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்தி தருமோ? வேதாந்த சித்தாந்த சமரசகன் கிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே.ே என்ற பாடல் மூலம் தெளிவாக எடுத்துரைப்பது ஈண்டுக் கருதத் தக்கது. இத்த நிலையில் ஐரோப்பியர் கம் காட்டிற்கு வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆங்கிலேய ஆட்சியைப் பெற்றது. மெக்காலே பிரபு ஆழ்க்து சிக்தித்துச் செய்த பரிந்துரையின் பேசில் ஆங்கில அரசினர் இந்தியருக்கு மேனாட்டுக் கல்வியை அளிக்கவேண்டுமென்று தீர்மானித்தனர். இதனால் இந்தியாவின் குன்றிப்போன நாகரிகமும், உயிரற்ற ஆசாரப் பழக்க வழக்கங்களும் கவின நாகரிகத்தால் மறைமுகமாகத் தாக்கப் பெற்றன. ஆங்கிலேயரின் ஆட்சி முற்றிலும் கிறுவப்பெறுவதற்கு முன்பே கிறித்தவ சமயம் இந்தியாவில்-முக்கியமாகத் தமிழ் காட்டின் கீழ்க்கரையோரத்திலும் மேற்கரையோரத்திலும்-பரவத் தொடங்கியது. கிறித்தவப் பாதிரிமார்களின் சமயப் பிரச்சாரம், அந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் அளித்த கல்வி, அரசினரால் கடத்தப்பெற்ற கல்விக்கூடங்கள், ஆங்கில ஆட்சி 3. தாயுமானவர் பாடல்-சித்தர் கணம் . 10,