பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையுடைப் பேச்சு - 127 " களவியலுரையாசிரியரின் கருத்து தொல்காப்பியர் அறத் தொடு கிற்றலைப் புரை தீர்’ என்று குறிப்பிட்டதைப் போலவே இறையனார் களவியல் ஆசிரியர் மாறுகோள் இல்லாமொழி என்று குறிப்பிடுவர். தோழிக் குரியவை கோடாய் தேஎத்து மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே.9 (கோடாப் - செவிலித்தாய் ; கொள் தாய் எனப் பிரித்து, தாயாகக் கொள்ளப்படுவோள் எனப் பொருள் கொள்க. தே எத்து - மாட்டு.1 என்பது அவர் கூறும் நூற்பா. இந் நூற்பாவில் மாறுகோள் இல்லா மொழி என்பதற்குக் களவியலுரையாசிரியர், எற்றி னொடு மாறு கொள்ளாமையோ எனின் தாயறி வினோடு மாறு கொள்ளாமையும், தலைமகள் பெருமையொடு மாறு கொள்ளாமை யும், தலைமகளது கற்பினொடு மாறுகொள்ளாமையும், தோழி தனது காவலொடு மாறு கொள்ளாமையும் காணினொடு மாறு கொள்ளாமையும், உலகினொடு மாறு கொள்ளாமையும் எனக் கொள்க’ என்று கயம்படக் கூறியிருப்பது படித்துப் படித்து இன்புறற்பாலது. தலைவிக்கு வாய்த்த அளவோழுக்க திகழ்ச்சி யினால் தன் மீது குற்றம் ஏதுமில்லை என்று இவ்வாறெல்லாம் தோழி கூறுவாள். மேற்கூறிய அனைத்திற்கும் குற்றமில்லாத வகை யாகத் தோழி ஆராய்க்து கூறுவாள் என்பதை உரையாசிரியர் பெற வைத்தமை எண்ணி மகிழ்தற்குரியது. அறத்தொடு நிற்றல் நடைபெறும் முறை : இவ்வறத்தொடு கீற்றல் ஏழு பகுதிகளாக நடைபெறும் என்று தொல்காப்பியர கூதுவர். எளித்தல் ஏத்தல் வேட்கை புரைத்தல் கூறுதல் உசாவுதல் ஏதீடு தலைப்பாடு உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ அவ்வெழு வகைய எம்மனார் புலவர்ெ என்பது தொல்காப்பிய நூற்பா. எளித்தல் என்பது, தலைவன் கம் மாட்டு எளியன் என்று கூறுதல். அதனது பயன் மகளுடைத். தாயர் தம் வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவராதலான், 8. இறை களவியல் - நூற்பா 14. 9. ைநூற்பா 14 - இன் உரை. 10. பொருளியல் - நூற்பா 12