பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 38 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை எளியனென்பது கூறி அறத்தொடு நிற்கப்பெறும். ஏத்தல் என்பது, தலைவனை உயர்த்துக் கூறுதல். அது, மகளுடைத் தாயர் 'தலைவன் உயர்ந்தான்’ என்றவழி மனமகிழ்வராகலின், அவ்வாறு கூறப்பட்டது : உயர்த்துக் கூறி அறத்தொடு கிற்கப்பெறும். வேட்கையுரைத்தலாவது, தலைவன்மாட்டுத் தலைவி வேட்கையும்: தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும் கூறுதல் வேட்கை கூறி அறத்தொடு நிற்கும். கூறுதலாவது, தலைவியைத் தலைவற்குக் கொடுக்க வேண்டும் என்பது படக் கூறுதல், உசாவுதல் என்பது: வெறியாட்டும் கழங்கும் இட்டு உரைத்துழி வேலனோடாதல் பிறரோடாதல் தோழி உசாவுதல், ஏதீடு தலைப்பாடு என்பது, யாதானுமோர் ஏதுவை இடையிட்டுக்கொண்டு தலைப்பட்டமை கூறுதல், உண்மை செப்டிங் கிளவிகாவது, படைத்து மொழியாது பட்டாங்கு கூறுதல். - இது கடைபெறும் சக்தர்ப்பங்கள் : இவ்வறத்தொடு கிற்றல் எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் கடைபெறும் என்பதை இறைவனார் கனவியல் ஆசிரியர் இவ்வாறு தொகுத்துக் கூறுவர் : காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும் கொதுமலர் வரையும் பருவம் ஆயினும் வாைவெதிர் கொள்ளாது தமர் அவண் மறுப்பினும் அவன் ஊறு அஞ்சும் காலம் ஆயினும் அங்கால் இடத்தும் மெய்ங்காண் ஒரீஇ அறத்தொடு கிற்றல் தோழிக்கும் உரித்தே.41 (காப்பு கைமிக்கு - இச்செறிப்பு அதிகமாகி : நொதுமலர் . அயலார் : எதிர் கொள்ளாது - ஏற்றுக்கொள்ளாது - தமர் - உறவினர் அவண் - அங்கு : அவன் ஊ று - தலைவனுக்கு நேரிடும் துன்பம் : மெய் காண் ஒரீஇ - உடலின்கண் கின்ற காண் நீங்கி.] என்பது அவ்ர் கூறும் நூற்பா. தலைவியின் களவொழுக்கத்தைக் கண்ட பெற்றோர் அவளை இற்செறிக்கும் போதும், பிறர் தலைவியை மணம் பேச வருங்காலத்திலும், தலைமகனுடைய பெற்றோர் பரிசத்தோடு தலைவியை வரைவதற்கு வரும்போது தலைவியின் பெற்றோர் பரிசம் குறைவு என்று கூறியோ பிறவாறோ மனத்தை மறுத்தபோதும், தலைவன் இரவுக் காலத்தில் தலைவியைத் தேடி வருங்கால் அவனுக்கு யானை, பாம்பு, புலி முதலியவற்றால் துன்பம் நேரிடும் என்று எண்ணித் 11. இறை, களவியல் - நூற்பா 29.