பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை f 3. 2 “குறமகள் ஈன்ற குறியிறைப் புதல்வரொடு”* என்ற ஐங்குறு நூற்றடியால் பெறப்படும். வேலன் என்பான் யார்? வேலன் என்பான் முருக பூசை பண்ணுபவன். இவனைக் குறுக்தொகை முருகயர்க்த முதுவாப் வேலன்' என்று குறிப்பிடும். முருகனுக்குரிய வேலைக் கையில் தாங்குதல் பற்றி வேலன்' எனப்பட்டான். அவன் கழங்கு பார்த்து குறி சொல்வது முற்காலத்து வழக்கமாக இருந்தது. இதனை, பெய்ம்மணல் முற்றங் கவின் பெற வியற்றி மலைவான் கோட்ட சினை இய வேலன் கழங்கினால் அறிகுவ தென்றான்' *அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச் சிறுபை ஞாற்றிய பல்கலைக் கருங்கோல் ஆகுவ தறியும் முதுவாப் வேல! கூறுக மாதோ கழங்கின் திட்டம்’** w என்ற பாடற்பகுதிகளால் அறியலாம். இன்று தமிழ் காட்டில் வதியும் தோட்டியர் என்ற வடுகளில் பன்னிரண்டு கழற்சிக் காய்களை ஒரு பேழிையுளிட்டு ஒருவனைக் கொண்டு அவற்றை எடுக்கச் செய்யும்போது வெள்ளி கட்டிய கழற்சி தோன்றிய கிலையில், அதனைக் கொண்டு இராசி முதலியனவறித்து குறி சொல்வது இன்றும் வழக்காக உள்ளது. வேலன் கழங்கு பார்த்து வந்த முறை இது போன்றதாதல் வேண்டும். அங் கனம் கழங்கு பார்க்குமிடத்து அணங்குற்ற பெண்ணின் கோப் தணித்தற்கு அவன் படிமம் ஒன்று பண்ணிக் கொடுத்தலும் உண்டென்று தெரிகின்றது. இனி, வெறியாட்டென் பது முருகக்கடவுள்பொருட்டுப் பலியிட்டு அக்கடவுள் ஆவேசிக்க ஆடுங் கூத்தாகும். இது பெரும்பாலும் மேற்கூறிய வேலனால் கிகழ்த்தப்பெறும் அணங்குற்ற பெண்டிர்பொருட்டு வேலன் வெறி பாடிக் கூறும் செய்தி பழைய நூல்களில் மிகுதியாகப் பயின்று வந்துள்ளன. தொல்காப்பியர் இதனைக் காந்தள் என்று குறிப்பர். இது, வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும், 27 24. ஐங்குறு-394. 25. அகம்-195 29. இங்குறு.-245, 27. புறத்திணை-நூற். 5 இனம்,