பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

يتر 13. மேலும் சில அகத்திணை மரபுகள் இதுகாறும் உள்ள கட்டுரைகளில் அகப்பொருள் இலக்கியப் பாடல்களைச் சுவைப்பதற்குரிய பல்வேறு அகப்பொருள் மரபு கண்டோம். ஈண்டு மேலும் சிலவற்றைக் காண்போம். அகவொழுக்கச் சிறப்பு : அகவொழுக்கம், புறவொழுக்கம் என்ற இருவகையொழுக்கங்களில் அகவொழுக்கம் வாழ்க்கையை உண்டாக்குவது : புறவொழுக்கம் இங்ங்ணம் உண்டாக்கப்பெற்ற அகவொழுக்கத்திற்குத் து ைண யாக நிற்பது. உலகுயிர்த் தோற்றத்திற்கே அகவொழுக்கம் காரணமாக இருத்தலின் எல்லாப் பொருளிலும் அவ்வகப்பொருளே சிறந்ததாக அமைகின்றது. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நாடி கிற்பதற்குக் காரணமான இயல் பூக்கமாம். காதல் அடிப்படையில் எழுவது அகப்பொருள். உலகுயிர்த் தோற்றமான உருவையுண்டாக்குவது கரு. இக்கரு உண்டாவதற்கு ஆணின் விரையிலுள்ள விந்தனு ஒன்று பெண்ணின் சினைப் பையில் தோன்றும் முட்டையுடன் சேர்தல் வேண்டும். இவ்வாறு அவை ஒன்றுசேர்வதற்குத் துணையாக கிற்பது இருபாலாரிடையே எழும் காதல் என்ற இயல்பூக்கம் ஆகும். இந்த இயல்பூக்கத்தின் காரணமாக ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அணுகிக் கட்டித் தழுவுகின்றனர். அணையும் பொழுது ஊற்றின்பம் பிறக்கு மாறு இயற்கை அமைந்துள்ளமையால், அதன் பயனாக இணை விழைச்சு ஏற்பட்டு ஆணின் விக்தனு பெண்ணின் முட்டையுடன் சேர்கின்றது: கருவும் உண்டாகின்றது. இக்கரு முதிர்க்து உருவும், உருவில் உயிரும் தோன்றுகின்றன. உயிரினங்களில் ஆண், கருவை புண்டாக்குவதால் விந்தணுவையும் முட்டையையும் ஒன்று சேர்க்கும் புணர்ச்சிக்கு மட்டிலுமே உடையது. பெண்ணோ, { 3. Goiášča-sperm. 4. சினைப்பை-owary. 5. 49-60---ovum.