பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் சில அகத்தினை மரபுகள் #35 அப்புணர்ச்சியுடன் கருவை உருவாக்கி, உயிராக்கி, உலகில் கடமாடவிடுவதால், அகவொழுக்கத்திற்கும் உலக வாழ்க்கைக்கும் பெண்ணே ஆணைவிடச் சிறப்புடையது. மக்களல்லாத உயிர்களில் பெண்ணினம் உயர்வுடையதாக இருப்பது ஈண்டு அறிதற்பாலது. மக்களுள்ளும் அகவொழுக்கத்தில் எல்லா நிலைகளிலும் தலைவியின் கிலை உயர்ந்திருப்பது இக்கருத்துப்பற்றியே யாகும். அகவொழுக் கத்திற்குக் காரணமாகவுள்ள காதலின் அடிப்படையில் தோன்றும் இன்பத்தைத் தொல்காப்பியரும், எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்.8 (மேவற்றாகும்-பொருந்தி நிகழும்) என்று எடுத்தோதியுள்ளார். அறிவியலறிஞர்கள் உலக இயற்கைப் பொருள்களைச் சேர்க்கை முறையால் இணைத்துப் புதுப்புதுப் பொருள்களை இயற்றி உலகை வாழ்விக்கின்றனர். அங்ஙனமே வாழ்வியல் அறிஞர் களாகிய அதுபவம் கிறைந்த மூத்தோர் பருவமறிந்து ஆண் பெண் இனத்தை ஒன்றுசேர்த்து வாழ்வை மலரச் செய்கின்றனர். எனவே, கரு உருவாகும் நிலையை அடைந்ததும், ஆண் பெண் இனங்கள் தானாக எழும் காமம் என்னும் ஒர் இயல்பூக்கத்தால் உந்தப்பெற்றுக் கலவியை காடி கிற்கும் புணர்ச்சி நிலையே உலகுயிர்த் தோற்றத் திற்கும் வாழ்க்கை கலத்திற்கும் இன்றியமையாததாய் அம்ை கின்றது. இந்த ஒழுக்கமே அகவொழுக்கம் என்பது. இந்த அகவொழுக்கத்தின் பெருமையை இருபாலாரும் அறிந்து, நன்கு உணர்ந்து அதன் தகுதியறிந்து நுகர்ந்து இன்புற்று, இனிது வாழ வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்ட பழங் தமிழ் மக்கள் அகவொழுக்கத்தைப் பலவாறு விரித்தும், இலக்கண வரையறை செய்தும், இலக்கியத்திற் பொதிந்தும் பொன்னேபோற் போற்றி வந்தனர். இத்தகைய ஒழுக்கத்தைத்தான் தொல்காப்பியம் துறை முதலியன அமைத்து நன்கு விளக்குகின்றது. *。 நிலங்களின் பெயர்க்காரணம் : ஐவகையொழுக்கங்கட்கும் ஐந்து கிலங்கள் உரியவை என்றும், அவை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்றும் முன்னர்க் கண்டோம். இங்ங்னம் இவற்றிற்குப் பெயர்கள் ஏற்பட்டதன் காரணத்தையும் நாம் 6. பொருளியல் நூற்.--29 (இளம்.) 7. இந்நூ ல்-பக்கம் - (30 - 35)