பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

素36 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ஆராய்ந்து கொள்ளுதல் சாலப் பயன் தரும். இப்பெயர்கள் மரம் அல்லது பூவிசேடங்கட்கு உரியவை என்பதும், முல்லை முதலிய வற்றின் மிகுதி அல்லது சிறப்புப்பற்றியே அங்கிலங்கட்கு அப்பெயர்கள் வழங்கலாயின என்பதும் பண்டையோர் கொள்கை. இளம்பூரணரும் "மாயோன் மேய’ என்ற நூற்பாவின் உரையில் குறிஞ்சி முதலிய பூக்களின் சிறப்புப்பற்றியே மலை முதலிய கிலங்கள் குறியிட்டாளப்பெற்றன என்று கூறுவர். அவர் கூறுவது: "முல்லை குறிஞ்சி என்பன இடுகுறியோ காரணக்குறியோ எனின், எகதேச காரணம் பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறி என்று கொள்ளப்படும். என்னை காரணம் எனின், நெல்லொடு காழி கொண்ட நறுவி முல்லை அரும்பவிழ் அலரி து உ: என்றமையால், காடுறை உலகிற்கு முல்லைப்பூ சிறந்தது ஆகலானும், ‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு கட்பே. 8 என்ற வழி மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூ சிறந்தது. ஆகலானும், இறாஅல் அருந்திய சிறுசிரல் மருதின் தாழ்சினை உறங்குக் தண்துறை ஊர' " என்றவழித் தீம்புனல் உல்கிற்கு மருது சிறந்தமையானும், பாசடை நிவந்த கணைக்கால் நெப்தல் இன மீன் இருங்கழி ஒதம் மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்: என்றவழிப் பெருமணல் உலகிற்கு நெய்தல் சி றந்தமையானும் இக்கிலங்களை இவ்வாறு குறியிட்டார் என்று கொள்ளப்படும். பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலின் அக்காலத்தைத் தளிரும் சினையும் வாடுதலின்றி சிற்பது பாலை என்பதோர் மரம் உண்டாகலின், அச்சிறப்பு நோக்கிப் பாலை என்று குறியிட்டார்" என்பது. மேலும், 8. முல்லைப்பாட்டு-அடி (8-10). 9. குறுங்.-3. 10. அகம்-286. 11. குறுங்-9. 12. அகத்திணை.5. (இளம்) உரை