பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் சில அகத்தினை மரபுகள் j4 1 என்ற கலிப்பாட்டடிகளால் இதனை நன்கு அறியலாம். செவிலி நற்றாய்க்கு அறத்தொடு கின்றாற்போல கற்றாயும் தங்திைக்கும் தன்னைக்கும் அறத்தொடு கிற்பாள். இதற்கு ஆசிரியர், தாயறி வுறுதல் செவிலியோ டாக்கும்.' என்று விதி செய்வர். அறத்தொடு கின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாப்.: என்ற கலிப்பாட்டடிகளால் இதை நன்கு அறியலாம். இருவகை வழக்குகள் : ஒரு சமுதாயத்தில் மக்கள் வாழும் வாழ்க்கை முறை உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு என இருவகைப்படும். மக்கள் வாழ்க்கையில் இயல்பாகக் காணப்பெறும் ஒழுக்கம்-கடக்கை முறை-உலகியல் வழக்கு எனப்படும். அவ்வுலகியல் வழக்கில் சிறந்தனவாயுள்ளவற்றை அறிஞர்கள் தேர்தெடுத்துப் பிற்கால மக்களின் உலகியல் வழக்குத் திருத்தமுறச் செவ்வையாக நடைபெறுதற்பொருட்டுப் பாடல்களாகப் பாடி, வைப்பர். அப்பாடல் உலகியல் வழக்கின் உயர்வு தோன்றுமாறு பலபடப் புனைத்து செய்யப்பெறும். தொல்காப்பியரும் இதனை, வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே விகழ்ச்சி பவர்கட் .ாக லான.*8 என்று கூறுவர். இதற்குப் பேராசிரியர், வழக்கென்று சொல்லப் படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே என்னை உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே கோக்கினமையின்' என்று பொருள் கூறுவர். எனவே, இத்தகைய பாடல்களாகிய நூல் வழக்கு நாடக வழக்கு’ எனப்படும். உலகியல் வழக்கும் நாடக வழக்கும் சேர்ந்ததே அகப்பொருட் புலனெறி வழக்கம் அல்லது செய்யுள் வழக்கம் ஆகும். இதனையே ஆசிரியர் தொல்காப்பியனார்,

  • நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம். 8 (புலன் நெறி லழக்கம் - நூல் நெறி வழக்கம்)

26, களவியல்-நூற். 48. (இளம்) 27 கலி 39. 28. மரபி-நூற். 94. (இளம். ) 29. அகத்திணை - நூற்பா. 55 (இளம்)