பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 4 2 தொல்காப்பீடிம் காட்டும் வாழ்க்கை என்று கூறுவர். இதற்கு இளம்பூரணர் தரும் விளக்கம் : "நாடக வழக்காவது, கவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது, செல்வத்தானும், குலத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் ங்ேகித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப் போருமின்றி அடுப்போகுமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் கடத்தி இலக்கண வகை யசன் வரைக்தெய்தினார் எனவும், பிறவும் இந்திகரணவாகிக் கவைபட வருவன வெல்லாம் ஒருங்கு வக்தனவாகக் கூறுதல், உலகியல் வழக்காவது, உலகத்தாற் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது. பாடல் சான்ற புலன் கெறி வழக்கமாவது, இவ்விருவகை 1. சலும் பாடல் சான்ற கைக்களை முதலாப் பெருந்தினை இது வாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள்” என்பது, இதனால் களவு, கற்பு கிலைகள் தமிழரிடையே தொன்று தொட்டு வழங்கிய உலகியல் வழக்கங்களேயாகும் என்பதும், இவையே பின்னர்ப் புலவர்களால் சிறப்பித்துப் பாடப் பெற்தும், இலக்கணம் கற்பிக்கப் பெற்றும் செய்யுள் வழிக்கு அடைந்தன என்பதும் பெறப்படு கின்றன. இதற்கும் ஆசிரியர், உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் வழிக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே. 39 என்றும், அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப. ! என்றும் விதிகள் செய்வர். எனவே, பழந்தமிழ் நூல்கள் யாவும் உலக வழ்க்கைத் தழுவிச் செய்யப்பெற்றவையேயாகும் என்பது ஈண்டு அறியத்தக்கது. கச்சினார்க்கினியரும் இஃது (செய்யுள் வழக்கு) இல்லதெனப்படாது. உலகியலேயாம். உலகியலின்றேல், ஆகாயப்பூ நாறிற்று என்ற வழி அது சூடக் கருதுவதுமின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும். இச்செய்யுள் வழக்கினை நாடக வழக்கென மேற்கூறினார். எவ்விடத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைத் துரை வகையாற் கூறும் நாடகவிலக்கணம் போல யாதானும் ஒரோ வழி ஒரு சாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை 30. பொருளியல் நூற் 21 (இளம்.) 31. ബ്ലൂ - 22