பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் சில அகத்தினை மரபுகள் 14s பலவுறு கறுஞ்சாக்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும் கினையுங்கால் நும்மகள் துமக்குமாங் கனையளே. 39 என்று முக்கோற் பகவர் இடைச்சுரத்தில் கண்ட செவிலியிடம் கூறியதைக் காண்க. தலைவனும் தலைவியும் அல்லாத ஏனைய பதின் மரும்: தலைமகனும் தலைமகளும் ஆகிய இருவரோடும் இடமும் காலமும் நோக்கி உரை நிகழ்த்தும் மரபுகளையெல்லாம் ஆசிரியர் நன்கு விளக்குவர். ஆனால், தொல்காப்பியத்தில் பிற்காலத்து அகப்பொருள் இலக்கணம் போல இக்கூற்றுகளைத் துறைவரிசைப் படி வைத்து ஆசிரியர் மொழிபவில்லை என்பது அறியத்தக்கது. ஒதால்காப்பியத்தில் தலைவன், தலைவி முதலியோர் கிளவி நிகழ்த்தும் இடங்களே தொகுக்கப்பெற்றுள்ளன. இங்ங்னம் தனித் தனி வைத்துக் காட்டப்பெற்ற கூற்றுகளைக் கோவைக்கிளவிகள் போலத் துறைப்படுத்திக் கூறுவதற்கு ஆசிரியர் காலத்து வழங்கிய அகப்பொருள் முறைவைப்பு இன்னதென்பதை விளக்கும் இலக்கியம் கிடைத்திலது. எனவே, அவற்றைத் தொல்காப்பியர் கூறும் முறைப்படி விளக்கு தற்குத் தடையாகின்றது. கடைச்சங்க நாளில் அகத்தினைபற்றி எழுந்த கற்றிணை முதலிய தொகை நூல்கள் பிற்காலத்துக் கோவை நூல்களில் கண்ட துறைகளையே பெரும்பான்மை கூறினும், அவை கோவைபோலக் காடசி முதலாகத் தொடங்கிப் பரத்தையிற் பிரிவு இறுதியாக வைத்துக் கூறவில்லை. அவை யாவும் குறிஞ்சி, பாலை என்னும் திணை முறைப்படியே வைத்து ஒதுகின்றன. எனவே, அவற்றில் ஒரு துறைக்கு மற்றொரு துறை தொடர்பின்றியே காணப்பெறும். இங்ங்னம் தொல்காப்பிய னார் அவ்வவர் கூற்றுகளைக் கோவைப-க் கூறாமல் சென்றதை உம், பழைய இலக்கியங்களும் அதற்கேற்பக் காணப்பெறுவதையும் கோக்கும்போது பண்டைக்காலத்தில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், கெய்தல் என்ற ஐக்திணையில் ஒரு முறைபற்றிப் பாடுதலே பெருவழிக்காக இருந்ததென்பதை ஊகிக்கலாம். எனினும், துணுகி ஆராய்ந்தால் தொல்காப்பியத்திலுள்ள அகப்பொருள் முறைவைப்பினை இன்னதென்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். இதற்குத் தொல்காப்பியனார் கருத்துகளையே பெரும்பான்மை தழுவியமைக்த இறையனார் களவியலுரையும் கம்பியகப்பொருளும் பெரிதும் துணைசெய்யும். 39. கலி - 9 அடி (13 - 15) 40. பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர, கண்டோர் என்போர். தொல்,-1ெ