பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్లీశ్రీ தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை காடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்.47 என்ற விதியால் இதனை கன்கு அறியலாம். மேலும், ஆசிரியர் பரிபாடலின் உதுப்புகளைக் குறிப்பிடும் பொழுது, கோமங் கண்ணிய கிலைமைத் தாகும்.”* என்று கூறுவதாலும் பரிபாடல் இன்பப்பகுதி பற்றியே பாடப் பெற்றது என்பதை உணரலாம். இதனால், ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தில் எல்லாப் பாக்களிலும் அகப்பொருள் அதிகமாக வழங்கப்பெறாமை அறியப்படும். ஆனால், தொல்காப்பியருக்குப் பின்னகுள்ள காலத்தில் இவ்வரையறை இல்லாமல் போய்விட்டது. கடைச்சங்க நூல்களில் கலிப்பாட்டு நீங்க ஒழிந்தவும் பிற்பட்ட நூல்களும் ஆசிரியம், வெண்பா, வஞ்சிப்பாக்களில் அமைக்கப்பெற்றிருப்பதால் இதனை உணரலாம். கச்சினார்க்கினியரும் காடக வழக்கினும்’ என்று மேற்குறிப்பிட்ட நூற்பாவின் உரையில் பிற்காலத்தில் கேர்த்த மாறுபாட்டை, ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம்புறம் என்னும் இரண்டிற் கும் பொதுவாய் வருமாறு நெடுந்தொகையும் புறமும் கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பனவற்றுட் காண்க’ என்று உரையிற் கொண்டு அமைப்பர்.' அகப்பொருளின் பெருமை கைக்கிளை, ஐந்திணை, பெருங் திணை என்ற இந்த ஏழு திணைகளையும் பற்றிப் புலவர்கள் பாடி வந்த வழக்கம் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்டே பெருகி வழங்கியிருத்தல் வேண்டும். இதனை, முேந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலக்தொகுத்தோன்’ என்ற பாயிரப் பகுதி வலியுறுத்தும். அங்ஙனமே, தொல் காப்பியருக்குப் பிற்பட்ட காலத்திலும் அவரிட்ட ஆணை வழியே நூல்கள் பாடப்பெற்றுப் பெருகி இருந்தன. கற்றிணை, குறுக் தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு. புறநானூறு என்ற எட்டுத்தொகை நூல்களுள் புற 47. அகத்திணை - நூற். 56 (இளம்.) 48. செய்யு. நூற். 117 (இளம், 49. அகத்திணை நூற். 53 (கச்)