பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 தோல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பின்னர், தமிழில் கவி பாடும் அளவுக்குத் தமிழ்ப் புலமை பெற்றுத் திகழந்தான்: அறம் உரைக்க வந்த திருவள்ளுவனாரும் காமத்துப் பாலைக் களவு, கற்பு எனப் பகுத்து, அவற்றின் விகற்பங்களைத் தமிழ் இலக்கணத்துடன் பொருக்தக் கூறிச் செல்வதிலிருந்தும் அகபபொருளின் பெருமையை கன்கு உணரலாம். உயர்த்த அன்பு கிலையை வெளிப்படுத்துவதிற்கு அகத் துறைகளைவிட உயர்ந்த இடம் பிறிதின்று. எனவே, முழு முதற் கடவுளிடத்துப் பேரன்பு செலுத்தி ஆடிப்பாடி நெஞ்சு கெக்குருகி அகங்கரைக்தி அடிபார்களும்கூட, அக்கடவுளையும் தம்மையும் தலைவன் தலைவியர்களாகக் கொண்டு இவ்வகத்துறைகள் வாயிலாகவே பக்தி என்னும் பெருவெள்ளத்தில் இழித்து மூழ்கிக் களிப்பாசாயினர். கடவுளிடத்துச் செலுத்தும் காமப்பகுதியைப் புறத்தினைக்குரியதாக ஆசிரியரகள் இலக்கணம் வகுத்திருப்பினும், அதன் பொருட்கூறுகள் யாவும் அகத்தினைத் தொடர்புடையன வாகவே அமைந்திருக்கின்றன. இந்த அருமை பெருமைகளைத் தேவாரம், திருவாசகம், காலாயிர திவ்வியப்பிரபந்தம் முதலிய நூல் களால் அறியலாம். எனவே, சிற்றின்பத்திற்கு மட்டுமன்றிப் பேரின்பக் கடலில் இறங்குவதற்கும் இக்த அகத்துறைகள் உரிமை ஆண்டுத் திகழ்வன என்பதை இளம் மாணாக்கர்கள் கன்கு உணர்தல் வேண்டும். 53. குறுக்தொகை - 184. ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன் என்பான சல் இயற்றப்பெற்றது. பிரமதத்தனும் பிரகத்தனும் ஒருவனே என்று ஊகித்தற்கு இடம் உண்டு.