பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 156 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை


நின் மனைவியை இவ்வாறு பாதுகாப்பாயாக!” என்று. தலைவனுக்கும், "நின் கணவனுக்கு இவ்வாறு பணிசெய்து ஒழுகு வாயாக!” எனத் தலைவிக்கும் சான்றோர் கற்பிக்கின்றனர். இது வதுவைச் சடங்காகிய 'கரணம்' நிகழுங்கால் கற்பிக்கப்பெறும். இது நச்சினார்க்கினியரின் விளக்கம். இறுதியில் குறிப்பிட்டதை அவர், "தலைவனும் களவின்கண் ஓரையும் நாளும் தீதென்று அதனைத் துறந்தொழுகினாற் போல ஒழுகாது, ஒத்தினும் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லறம் நிகழ்த்துதலிற் கற்பாயிற்று’ என்று கூறுவர்.(11).

      தலைவன் தலைவியராகிய இருவரும் ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் மணந்து வாழுங்கால் தலைமகளது மனத்தின்கண் அமைந்த கலங்கா நிலைமையே கற்பு எனப்படும், வள்ளுவப்பெருந்தகையும் "கற்பென்னும் திண்மை"(12) என்று: உரைத்தமை காண்க. இத்தகைய மன உறுதியை உலகினருக்குப் புலப்படுத்துவதுதான் திருமணச் சடங்காகிய கரணம் என்பது: 

காதலர் இருவரும் பிரிவின்றியைந்த கட்புடையார் என்பதனை வலியுறுத்துவது. இங்கியதி - மரபு - பிழைபடுமாயின் அவ்விருவரது வாழ்க்கையில் சாதலையொத்த பெருந்துன்பம் நேரிடும் என்பது. திண்ணம், கரணம் பிழைக்கில் மரணம் பயக்கும்’ என்று உலகினோ ரிடம் வழங்கும் பழமொழியும் இதனை வலியுறுத்துவதைக் காண்க.

      திருமண ஏற்பாடு: 'வரைபொருட் பிரிவின்' பின்னர் பெண் பேசுவிததல் நிகழும் என்று மேலே கூறினோமன்றோ? பெண் பேசுங்கால் தலைவனுடைய சுற்றத்தார்களேயன்றி அறநிலை 

சான்ற வேறு சான்றோர்களும் இருப்பர். இதனை, "தலைமகன் தமர் பார்ப்பார் சான்றோரை முன்னிட்டு அருங்கலங்களோடு வரைதற்குப் புகுவர்” என்னும் இறையனார் களவியலுரையால்(13). துணியலாம். அங்ஙனம் பேசச் செல்லுங்கால் மண முரசொலிக்கச் செல்வர். அவ்வமயம் தலைவியின் சுற்றத்தாரும் தமது இல்லத்தைத் தோரணம் முதலியன காற்றிக் கவின்படுத்திப் பொற்குடங்களும் ஐந்தலை விளக்குகளும் பிறவும் நிரல்பட அமைத்து, எதிர் முரசொலித்துத் தலைவன் சுற்றத்தாரை வரவேற்பர். இதனை ஒரு. துறைப்பொருளாகவே கூறுவர் மணிவாசகப்பெருமான்.


11. கற்பியல் - நூற்பா 1-இன் உரை (கச்.) 12. குறள் - 24. 13. இறை - களவியல் - நூற்பா 28 - இன் உரை.