பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவொழுக்கம் f5さ உரனும் தலைவிமாட்டு உளதாகிய அச்சமும் காணும் மடலும் ஏதுவாக இயற்கைப்புணர்ச்சி இடையீடுபட்டுழி வேட்கை தணியாது வரைக்தெய்துங்காறும் இருவர்மாட்டும் கட்டுண்டு கின்ற நெஞ்சம் கட்டுவிடப் பெறுதல். இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைவன் அலரறிவுறுக்கப்பட்டு நீங்கி வரைக்தெப்துங்காறும் புணர்ச்சி வேட்கையாற் செல்கின்ற நெஞ்சினை இருவரும் வேட்கை தோற்றா மல் தளைக்கப்பட்டதனைத் தளை என்றும் கூறலாம். "உழுந்து தலைப் பெய்த என்ற அகப்பாட்டில்,

  • முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப

அஞ்சினள் உயிர்த்த காலை’ என்பதனால் இயற்கைப்புணர்ச்சியின்மையும், “அகமலி உவகையள் ஆகி முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சி’ என்பதனால் உள்ளப்புணர்ச்சி யுண்மையும் அறியலாம் களவொழுக்கப் புணர்ச்சிபோல் மனத்தில் அச்சமின்றி செயலில் விரைவின்றி நிகழும் கற்புப் புணர்ச்சியை அடியிற்கானும் குறுக்தொகைப் பாடலில் காணலாம். - விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபேறு சிறப்பிற் புத்தேள் காடும் இரண்டும் துக்கிற் சீர்சா லாவே , பூப்போல் உண்கண் பொன்போல் மேனி மாண்வரி அல்குல் குறுமகள் தோள்மாறு படுஉம் வைகலோ டெமக்கே’8 (புத்தேள் - தேவர் உலகம்; துரக்கின் - ஒருங்கு வைத்து ஆராய்ந்தால், சீர்-கனம்: சாலா-ஒவ்வா. தோள் மாறுபடுதல் - ஒருவர் இடத்தோள் மற்றவர் வலததோளிலும், ஒருவர் வலத் தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல்) இப்பாடலில், தலைவியுடன் இன்புற்று இல்லறம் கடத்தும் தலைவன், அத்தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று தோழி முதலியோர் அறியும்படி கூறுவதாக வந்துள்ளதைக் காண்க. இது நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சி பாகும். 7. ஆகம்..86. 8. குறுக். -101.