பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவொழுக்கம் 77ァ பரத்தையிற் பிரிவே கிலத்திரி பின்றே.41 என்பது விதி. தலைவன் பரத்தையருடனும் ஏனைய மனைவியருட லும் தன்னுர்க்குப் புறம்பாயுள்ள செய்குன்றமும் வாவியும் விளையாட்டிடமும் போன்றவற்றிற்குச் சென்று இன்ப நுகர்ச்சி எப்துவான். யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.43 என்பது விதி, இதில் யாறும் குளனும் காவும் ஆடி என்பதற்கு நச்சினார்க்கினியர் காவிரியும் தண்பொருகையும் ஆன் பொருகையும் வையையும் போலும் யாறுகளிலும், இருகாமத்தினையேரிபோலும் குளங்களிலும், திருமருதந்துறைக்காவே போலும் காக்களிலும் விளையாடி’ என்று கூறுவர். காவிரிப்பூம்பட்டினத்தையடுத்து இருகாமத்தினையேரிகள் இருந்தமை பட்டினப்பாலையாலும்* சிலப்பதிகாரத்தாலும்' அறியலாம். மதுரையில் வையையை யடுத்துத் திருமருதந்துறை என்னும் உய்யானம் இருந்தமை கலித் தொகையாலும் பரிபாடலாலும் விளங்கும். தலைவனின் பரத்தைமையொழுக்கம் ஊரில் அலராய் எழுங்கால் தலைவனை கினைந்து தலைவிக்கும், தலைவியை கினைங்து தலைவனுக்கும் காமம் மிக்கு கிகழும் என்று கூறுவர் தொல்காப்பியர், அலரில் தோன்றும் காமத்து மிகுதி.ே என்பது விதி. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும் இக் கோய்." (கெளவை-பழிச்சொல்) நெய்யால் எரிதுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.8 (நுதுப்பேம்-அவிப்போம்; என்ற குறட்பாக்களை இதற்கு இலக்கியமாகக் கொள்ளலாம். 41. இறை கற்பியல் நூற் 52. 42. கற்பியல்-நூற்.50 43. பட்டின - அடி 39. 44. சிலப் - 9: 59.52, 45. கலி - 25, 46. கற்பியல் - நூற். 22 4. குறள்.1147. 48. குறள். 11:48, தொல்.--12