பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் வாழ்வில் நேரிடும பிரிவுகள் 187 சாதி வேறுபாடு மேற்கண்டவாறு கூறப்பெறும் ஆறுவகைப் பிரிவுகட்கும் காலவரையறையும் இலக்கண நூல்களில் கூறப் பெற்றுள்ளது. கல்வியின்பொருட்டுப் பிரியும் பிரிவு மூன்றாண்டு கட்கு மேற்படக் கூடாதென்பது பண்டையோர் கொள்கை. வேண்டிய கல்வி பாண்டுமூன் றிறவாது." என்பது தொல்காப்பியம். ஏனைய பகை, துரது, பொருள் பற்றிய பிரிவுகள் ஒராண்டுக்குள்ளாதல் வேண்டுமென்பதும் தொல் காப்பியரின் கருத்தாகும். வட நூலார் ஒதற் பிரிவுக்கு ஆறாண்டும், அறப்புறங் காவற்கு எட்டாண்டும் கூறுவர். இனி, வேட்டைமேற் சேறல், காடு கானச் சேறல் முதலிய பிரிவுகளைப் பாலையொழுக்க மாகக் கொண்டு புன்னெறி வழக்கம் செய்தல் கூடாது என்பது ஆன்றோர் கொள்கை. இங்ங்னம் ஒவ்வொரு பிரிவுக்கும் காலவரை பறை கூறியவர்கள் இப்பிரிவுக்குரியார் யாவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். தொல்காப்பியர் காலத்திலேயே கால்வகைச் சாதிகள் வகுக்கப்பெற்றிருந்தன. இதனை எண்ணியே உரை யாசிரியர்கள், அக்தனர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர்க்கு இந்த இந்தப் பின்வுகள் உரியவை என்று கூறிச் செல்லுகின்றனர். ஆனால், ஆசிரியர் தொல்காப்பியனார் இப்பிரிவு இவர்க்குரியது னைத் தெளிவாக நூற்பா செய்து காட்டவில்லை. எனவே, பிறப்பு காரணமாகத் தொல்காப்பியர் உயர்க்தோர் தாழ்ந்தோர் என்ற கொள்கையைக் கூறினார் அல்லர் என்பது சிந்திக்கற்பாலது. தமிழ் மறை அருளிய திருவள்ளுவரும், - அறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்." & என்று கூறியுள்ளதை நாம் கன்கு அறிவோம். தவிர, உலகியலில் இன்னார்தான் போர் கார்ணமாகப் பிரிய வேண்டும், இன்னார்தான் பொருளீட்டுவதற்குப் பிரிய வேண்டும் என்ற கியதியும் என்றும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்று எல்லாச் சாதியினரும் எல்லாத் தொழில்களையும் செய்து வருவது கண்கூடு. பார்ப்பனர் போரில் ஈடுபடுகின்றனர்; அரசு அலுவல் பார்க்கின்றனர்; வாணிகம் செய்கின்றனர்; உழவுத்தொழில் புரிகின்றனர். அங்ஙனமே, வேளாளர் மறையோதுகின்றனர்; அரசு அலுவல்களில் அமர்க் துள்ளனர்; வாணிகத்தில் ஈடுபடுகின்றனர். எனைய சாதியினரும் 6. கற்பியல் நூற்பா 47. 7. டிை-நூற்பா 48, 49. 8. குறள் - 972.