பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ඝණ් கண்காணித்து வருபவர்கள். இத்தகைய கல்வித் துறை :ஜாம்பவான் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்திலும் தமிழ்” இடம் பெறச் செய்து, அதன் வளர்ச்சியில் கடைக்கண் நோக்கத்தைக்' கொண்டவர்கள். ஒருதலைச் சார்பற்ற உள்ளத்தைக்கொண்ட இவர்கள் ஆசியாலும் பைந்தமிழ்ப்பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலின் திருவருளாலும் தமிழ்த் துறை விரிவடைந்து, பல தமிழறிஞர்கள் ஒருங்கிருந்து பணி யாற்றும் வாய்ப்பு அண்மையில் ஏற்பட வேண்டும். அன்றியும், பல்கலைக் கழகங்களின் ஆலோசனைக் குழு (Inter-University Board) வின் தலைவராக இருந்து பல்கலைக் கழகக் கல்வியின் தரம் குறையாதிருக்கப் பாடுபடுபவர்கள். ஆந்திர மாநில மேல் சட்ட சபையில் உறுப்பினராக இருக்து அரசியலிலும் தம் ஆழ்க் தகன்ற அநுபவத்தை வழங்குபவர்கள். ஆசிரியர்களின் தோன்றா துணையாகவுள்ள இத்தகைய பேரறிஞரின்பால் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக இப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றும் சிறியேன் இந்நூலை அவர்கட்கு அன்புப் படையலாக்குகின்றேன். இவர்கள் ஆசியால் இந்நூல் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமிதத்துடன் உலவும் என்பது என் திடமான நம்பிக்கை. எனக்கு இயல்பாகவுள்ள பல வகையான குறைகளால் இங் நூலின் பொருட்புணர்ப்பில் பலவித இடைவெளிகள் ஏற்பட் டிருத்தல் கூடும். அறிஞர்களும் அன்பர்களும் அவற்றைப் பொறுப்பார்களாக, அவர்கள் அத்தகைய இடைவெளிகளையும் ஏனைய குறைகளையும் சுட்டியுரைப்பார்களாயின் அவற்றை கிறைவு செய்து அடுத்த பதிப்பில் இணைத்துக்கொள்வேன். இந்நூலை எழுதி வெளியிடுவதற்கு யான் மேற்கொண்ட முயற்சியை நிறைவேற்றி வைத்த எல்லாம் வல்ல திருவருனை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்குகிறேன். வேண்டத் தக்கது அறிவோய் ே வேண்ட முழுதுக் தருவோய் நீ வேண்டும் அயன்மாற்கு ஆரியோய் ே வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசுஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. திருப்பதி - 15-2-63 க. சுப்பு ரெட்டியார் 6. திருவாசகம்,-குழைத்த பத்து-6