பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ö& தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை உள்ளுறையின் சிறப்பு முடிவில்லாத அகப்பொருள் ஒழுக லாற்றில் பெறும் இன்பம் அனைத்தும் இத்தகைய உள்ளுறைப் பொருள்களால் விளங்கித் தோன்றும்படி முன்னையோர் வகுத் துசைத்தனர் என்பது ஆசிரியர் கருத்தாகும். இதனை அவர், அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே." என்ற விதியால் கூறுவர். தலைவன் தன் தன்மையென்ப தொன்றன்றி வந்தன்மை எனக் கருதுதலின், யாம் ஒன்றை கினைக்து ஒன்று கூறினும் அவன் அச்சொற்களைக் கேட்டு வெகுளாது இன்பம் எனக் கொள்வன் என்ற கருத்தால் தலைவியும் தோழியும் அவனுடைய குறைகனைக் குறிப்பாகப் புலப்படுத்தி இடித்துரைக்கும் கிலையிற் கூறிய உள்ளுறைப் பொருண்மையினைக் கேட்ட தலைவன் இவை இன்பங் தரும் என்றே ஏற்றுக் கொள்வன் என்பது கச்சினார்க்கினியர் இதற்குத் தரும் விளக்கம். எனவே, இத்தகைய உள்ளுறைப் பொருண்மையால் தலைமக்களது இன்ப உணர்வு வளர்ந்து சிறத்தலைக் காணலாம். மங்கல மொழியும், இடக்கர் அடங்கிய மொழியும், குற்றமற்ற ஆண்மை காரணமாகச் சொல்லப்பெற்ற மொழியும் உள்ளுறையின் கண் அடங்கும் என்பச் ஆசிரியர், மங்கல மொழியும் அவையல் மொழியும் மாறில் ஆண்மையில் சொல்லிய மொழியும் கூறிய மருங்கிற் கொள்ளும் என்ப." என்பது அவர் கூறும் விதி. மங்கல மொழி என்பது, மங்கலத்தாற் கூறும் சொல் (எ-டு.) செத்தாசைத் துஞ்சினார் என்றல். அவையல் மொழி என்பது. இடக்க அடக்கிக் கூறுதல். (எ-டு.) கால் கழுவி வருதும் என்றல். மாறிலாண்மையிற் சொல்லிய மொழி என்பது, ஒருவனைச் சிங்கம் வந்ததென்றாற் போற் கூறுவது. இவை யெல்லாம் சொல்லால் பொருள் படாமையின் உள்ளுறையின்பாற். பட்டன. நிற்க. - . வடமொழியில் தொனி வளர்ச்சி : வடமொழிவான ர் க. ஸ் தொனியை வஸ்துத் தொனி, அலங்காரத் தொனி, ரஸத்தொனி என மூவகையாக வகுத்து, ஒவ்வொன்றையும் பலவாக விரித்துக் காட்டி புள்ளனர். அவ்வாறிருப்பினும் அம்மொழியில் அலங்கார நூலாருள் பொருளியல்-49:கச்சி.) 17. பொருளியல்-48 (இளம்.)