பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் 205 முற்பட்டவர், குறிப்புப் பொருள் (வியங்கியம்), சுவை (ரலம்) முதலியவற்றை அணிகளினுட்படுத்தியே கூ றி யு ள் ளன. சி. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்க்த பேரறிஞராகிய ஆனந்தவர்த்தனன்சானியர் என்பவரே குறிப்புப் பொருளின் சிறப்பினையுணர்த்து, த்வக்யா லோகம் என்னும் நூலொன்றனை எழுதி உலகிற்கு அறிவித்தார். அதன்பின் அவர். கொள்கையைப் பின்பற்றி மம்மட பட்டர், ஹேமச்சந்திரர் முதலியோர் காவியப்ரகாலம், காவ்யாதுலாலனம் முதலிய நூல்களை இயற்றினர். தமிழின் தொன்மை : வடமொழியில் த்வர்யா லோகம் முதலிய நூல்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தமிழ் மொழியில் ஆசிரியர் தொல்காப்பியனார் இறைச்சிப் பொருள், மெய்ப்பாடு போன்ற நுட்பமான கருத்துகளைக் கூறி யுள்ளார். ஆயினும், அவை சிறப்பாகவும் விரிவாகவும் கூறப்பெற வில்லை. வட மொழியில் இத்துறைகள் இன்று கல்ல முறையில் வளர்ச்சி பெற்றுள்ளன. தொல்காப்பியருக்குப் பின்னர் வந்த இல்க்கண ஆசிரியர்கள் தொல்காப்பியர் கூறிய நுண்கருத்துகனை விரித்து வளர்க்கத் துணியவில்லை. இப்பொழுது இவற்றை கன்றாக அறிக் துகொள்ள விரும்பினாலும் விரித்துக் கூற எண்ணி னாலும், வடமொழி நூல்களின் துணை இன்றியமையாததாக இருக்கும். கச்சினார்க்கினியர், கம்பியகப்பொருள் ஆசிரியராகிய காற்கவி சாச நம்பி, மாறன் அலங்காரமுடையார் ஆகியோர் இவ்விறைச்சிப் போருளைக் குறித்துக் கூறியவற்றையெல்லாம் கன்கு ஆய்ந்து அவர்கள் தடுமாறும் இடங்களையும், மயங்கிக் கூறும் இடங்கனை பும் தெளிவாகக் காட்டி இறைச்சிப் பொருள்” என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை வரைந்துள்ளார்கள் பன்மொழிப்புலவர் உயர திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள். அக்கட்டுரை கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழா மலரை அணி செய்து கிற்கின்றது. அன்பர்கள் அதனைப் படித்துப் பயன் பெறு 、f蕊G序厝、 தொல்.-14