பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. தமிழர் கண்ட புறப்பொருள் தொல்காப்பியர் பொருளை முதல், கரு, உரி என்று மூவகைப்படுத்திப் பேசுவர் என்றும், அவற்றுள் உரிப்பொருள் அகம், புறம் என இருவகைப்படும் என்றும் மன்னர்க் கண்டோம்.' அகப்பொருள் இன்னதென மேலே விளக்கினோம். ஈண்டு புறப் பொருளை இன்னதென்று விளக்குவோம். புறமானது, அகம் போல ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாலும் துய்த்துணசப் பெறுவதும், இஃது இவ்வாறு இருக் தது என்று பிறர்க்குக் கூறப்பெறுவதுமாகிய ஒழுகலாறாகும். புறப்பொருள் பெரும்பான்மை அறமும் பொருளும் பற்றியே நிகழும் என்து கூறுவர் இலக்கண நூலார். இப்புறப்பொருள்பற்றிய செப்புண் வழிக்குகளும் அகப்பொருள் போலவே தமிழ்கூறு கல்லுல கத்தில் நிலவிய உலகியல வழக்குகளினின்று விரிந்தவையே என்று கிருதுவதில் இழுக்கொன்றும் இல்லை. இவை செய்யுள் வழக்கு பேதுங்கால் வரையறையின்றி வீரியாவண்ணம் இவற்றையும் தமிழ்ச் சான்றோர்கள் இலக்கண வரம்புக்குட்படுத்தி ஒதுவாரா பினர். எனவே, தொல்காப்பியர் இப்புறப்பொருள்கட்கும் திணை, துறைகளை வகுத்துப் பேசுவர். அன்பினால் நிகழும் அகத்தினை யொழுகலாற்றைக் குறிஞ்சி முதலாகிய ஐக்திணையாகவும் கைக்கிளை பெருக்திணைகளாகவும் சேர்த்து ஏழு திணையாகப் பகுத்தாற்போன்று, அன்பின் வழிப்பட்டனவாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தேகிகழும் செயல்முறைகளையும் ஏழு திணைகளாகப் பகுத்துசைத்தல் பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக் கண மரபாகும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழையும் புறத்திணைகளாகக் கூறுவர் தோல்காப்பியர். இத்திணைகள் பண்டைக் காலத்தில் தமிழ் காட்டில் வழங்கிய போர் முறைகளையும், அம்முறையில் காட்டப் பெதும் வீரச்செயல்களையும் பெரும்பான்மையாகவும், ஏனைய அரசியல், கொடை, புகழ், கிலையாமை முதலியவற்றைச் சிறுபான் மையாகவும் உணர்த்துகின்றன. அகத்திணை யொழுகலாறுகள் தத்தம் கிலத்திற்குச் சிறப்புடைமையுடைய குறிஞ்சி முதலிய பூக்க னாற் பெயர் பெற்றன என்று முன்னர்க் குறிப்பிட்டோம்.2 இங்கனமே, புறத்திணை யொழுகலாறுகளும் இவற்றை மேற்கொள் இந்நூல்-பக்கம் 1. இக்துரல்-பக்கம் 13கி. 警 美零 ہم - گاه