பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட புறப்பொருள் 21 f வோர் அடையாளமாகச் சூடுதற்குரிய வெட்சி, வஞ்சி முதலிய பூக்க காற் பெயர் பெறுவனவாயின என்பதை நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்களின் உரைக்குறிப்பினின்றும் அறியலாம். திணை விளக்கம் முன்னர்க் கூறிய அகத்திணையாகிய வாழ்வியலுக்குத் துணை செய்யும் கல்வி, பொருள், அரசியல் முதலியனவே புறத்தினையில் ஏழு திணைகளில் அடக்கிக் கூறப்பெறுகின்றன. இவற்றை ஒன் வொன்றாக ஈண்டு விளக்குவோம். வெட்சித்திணை இகல் குறித்த வேந்தர் இருவருள் ஒருவர் போர்த்தொடக்கமாகப் பகைவர் நாட்டின்மேல் படையொடு சென்று, அக்காட்டில் வாழும் அறவோராகிய அந்தணர், மகளிர்,பிணியாள்கள் முதலிய தீங்கு செய்யத்தகாத மக்களைப் போரால் விளையும் துன்பங்களினின்றும் விலக்கி உய்வித்தல் வேண்டி, யாம் போர் கருதி நுமது காட்டிற் புகுகின்றோம்; விேர் நுமக்குப் பாதுகாவலான இடங்களை காடிச் செல்லுமின்” என அறிவிப்பர். இவ்வறி விப்பினையுணர்ந்து .ெ வ ரி ச் செல்லும் பகுத்தறிவில்லாத ஆனிரைகளை ஒருவரும் அறியாதபடி கள்ளிரவில் தம் படை வீரர்களை அனுப்பிக் களவிற்கவர்ந்து வரச் செய்து அவற்றைப் பாதுகாப்பர். அறநெறி வழுவாது மேற்கொள்ளப்பெறும் தமிழரின் ஆபோர் முறையில் ஒரு வேந்தனால் அனுப்பப்பெறும் வீரர்கள் பகைவர் காட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் களவிற். கவர்ந்து வந்து பாதுகாத்தலே வெட்சித்திணை என வழங்கப்பெறு கின்றது. பழமை தொட்டே இவ்வழக்கம் கம் தமிழகத்தில் இருந்து. வந்தமை, ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை பீரும் பேணித் தென்புல வாழ்கர்க்(கு) அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ திரும் எம்.அம்பு கடிவிடுதும் நூம் அரண் சேர்மின் என ஆறத்தாறு துவலும் பூட்கை மறத்தின்’’’ (பேணி.பாதுகாத்து: இறுக்கும்-செலுத்தும்; கடி-விரைவாக: அசண்-பாதுகாவலுள்ள இடம்; துவலும்-சொல்லும், பூட்கை-கோட் பாட்டையுடைய.1 3. புறம்-9.