பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அல்வகத்தோன் தன் செல்வத்தாலன்றிப் போர்த்தொழிலால் வருத் தியது கூறுதல் ; (3) அகத்திருக்தோன் தன் அரணுக்கு அழிவு தோன்றிய வழி அவன் புறத்துப் போந்து போர் செய்தலைக் கூறுதல் : tசி) புறத்தோன் அகத்தோன்மேல் வந்துழி அவன் பகை யினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலின் பெருமை கூறுதல் என்பன. மேலும், இத்திணையில் இரு பெரு வேக்தர்க்கும் ஒன்றாய் வரும் வேறு பன்னிரண்டு துறை களையும் கூதுவர் ஆசிரியர். * தும்பைத்திணை தனது வலியினை உலகம் புகழ்தலே தான் பெது பொருளாக எண்ணி வந்த வேந்தனை மாற்று வேங்தனும் அவ்வாறே எண்ணி எதிர்த்துப் பொருவது தும்பைத்திணை என வழங்கப்பெறும். மைக்து பொருளாக வன்த வேந்தனைச் சென்துதலை பழிக்கும் சிறப்பிற் றென்ப.ே (மைந்து - வலி) என்பது இத்திணைக்கு ஆசிரியர் கூறும் விதி. எனவே, படை பாளரது அரிய பெரிய வீரச்செயல்களை விளக்குவது தும்பைத் தினையாகும், சோம்பனையும், மலடனையும், மயிர் அவிழ்க் தோனையும், பின்வாங்கினோனையும், படையிழக்தோனையும் ஒத்த படையெடாதோனையும் கொல்லார் : இஃது அறப்போர் எனப்படும், இத்திணையின் சிறப்பை ஆசிரியர் தொல்காப்பியனார், கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற் சென்ற உயிரின் கின்ற யாக்கை இருகிலக் தீண்டா அருகிலை வகையொடு இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே.* என்ற விதியால் விளக்குவர். பலரும் ஒருவனை அணுகிப் பொருவதற்கு அஞ்சி விலகி கின்று அம்பால் எய்தும் வேல் கொண்டு எறிந்தும் போர் புரிகின்றனர். அந்த ஆயுதங்கள் அவன் உடலில் தைக்கின்றன. உயிரும் உடலை விட்டு நீங்கி விடுகின்றது. எனினும், அவனது உடல் கிலத்தில் வீழாமல் அப்படியே கிற்கின்றது. அம்பு. 15. புறத்தினை நூற். 13 (கச்சி.) 16. புறத்திணை - நூற். 15. (கச்சி.) 17. புறத்திணை - நூற். 13 (இளம்.)