பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட புறப்பொருள் 2輩アー களும் வேல்களும் தேருருளியின் ஆரக்கால்கள்போல் உடலில் தைத்ததனால் உடல் உருளியின் குடம் போல நிலத்தில் படாது கிற்கின்றது. அத்துணை நேரம் கீழ் விழாமல் அவ்வீரன் பொரு. கின்றான். மற்றொரு வீரன் பெருவீரத்துடன் பொருகின்ற நிலை யில், வாள் முதலியவற்றால் அவன் தலையும் கைகால்களும் அறுபடு கின்றன. இக்கிலையிலும் அவனது தலையும் உடலும் கையும் காலும் அட்டையாடுதல் போல ஆடிக்கொண்டே வீரச் செயல்களைக் காட்டி நிற்கின்றன. இதனை அட்டையாடல்’ என்றும் கூறுவர். இந்த இருவகைச் சிறப்பும் தும்பைத்திணைக்குரியது. விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.' என்ற திருக்குறள் இத்தும்பைச் செயலைக் குறிக்கின்றது. இத்தும்பைத்தினை ஏனைத் திணைகட்குப் பொதுவாம் என்பது கச்சினார்க்கினியர் கருத்தாகும். இனி மேற்றுறை. கூறுகின்றது. மைக்து பொருளாக வந்தது ஞ் சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே என்றுணர்க. கிரை கொள்ளப்பட்டோன் பொருகளங் குறித்துப் போர் செய்தலும், அவன் களங்குறித்தது. பொறாது கிரைகொண்டானுங் களங்குறித்துப் போர் செய்தலும் வெட்சிப்புறத்துத் தும்பையாம். வஞ்சியுள்ளும் விழுப்புண் பட்ட வீரரை நோக்கி வேந்தற்குப் பொறாமை கிகழ்ந்து துறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம். முற்றப்பட்டோனை முற்றுவிடுத்தற்கு வேறொரு வேந்தன் வந்துழி அவன் புறம் போக்து களங்குறித்துப் போர் செய்யக் கருதுதலும், அவன் களங்குறித்துழிப்புறத்தோனும் களங்குறித்துப்போர்செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத் தும்பையாம். இவையெல்லாம் மண்ணசையும் அரண்கோடலுமன்றி மைக்து பொருளாகச் சென்று துறக்கம் வேட்டுப் பொருங் தும்பைச் சிறப்புக் கூறிற்று' என்ற அவரது உரைப்பகுதியால் நன்கு அறியலாம். இத்திணைக்கு, உரியனவாக ஆசிரியர் தொல்காப்பியனார் பன்னிரண்டு துறைகள் கூறுவர். அவையாவும் ஒரு களத்துப் பொருது கிற்கும் இரு திறத்துப் படையாளர்க்கும் பொதுவாக அமைத்தவை. இருவர் எங்குப் பொரினும் அது தும்பை எனப்படும். வாகைத்திணை வலியும் வருத்தமுமின்றி, குறையாத முயற்சியையுடைய ஒவ்வொருவரும் தத்தம் தொழிலையும் 18 குறள் , 775 19. புறத்திணை - நூற். 16-இன் உரை. 20. ை- நூற். 17.