பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட புறப்பொருள் 2 : 9 கிரையோம்பல் ஆகிய ஆறும் வணிகர்க்குரியவை. உழவு, உழ வொழிக்த தொழில், விருந்தோம்பல் , பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழித்த கல்வி ஆகிய ஆறும் வேளாளர்க்குரியவை. இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது, அரசர் இவரிடம் பெண் கோடல்பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக் கூட்டி ஆறென்றும், அரசசால் அச்சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்றும் கூறுவாரும் உளர்’ என்டர் நச்சினார்க்கினியர்.”* (4) மூவகைக் காலமும் நெறியினாற்றிய அறிவன்தேயம் : மழையும் .பனியும் வெயிலுமாகிய மூவகைக்காலத்தினையும் நெறியினால் அமைத்த முழுதுணர்வுடைய அறிவர் பகுதி. 'அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் துரமமும் மீன் வீழ்வும் கோள்கிடிையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல்” என்பர் இளம்பூரணர். (5) காலிரு வழக்கில் தாபதி பக்கம் : எட்டு வகைப்பட்ட கெறிகளில் தவம் புரியும் முனிவர் பகுதி. நீராடல், கிலத்திடை கிடத்தில், கோலுடுத்தல், சடை புனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவு கோடல், தெய்வ பூசையும் அதிதி பூசையும் செய்தல் என்ற எட்டையும் அவர்களது கெறிகளாகக் கூறுவர் இளம்பூரணர். கச்சினார்க் கினியர் இவற்றை தவம் புரிவார்க்கு உரியனவும், தவஞ்செப்து யோகம் செய்வார்க்கு உரியனவும் என இருவகைய என்று கூறுவர். அவர் கருத்துப்படி தவம் செப்வார்க்கு உரியன உணவினும் கீரினும் சென்ற மனத்தைத் தடுத்தல், ஐந்தீ காப்பனும் நீர் நிலை யினும் கிற்றல், கடலும் காடும் மலையும் முதலியவற்றில் கிற்றல், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தல், உண்டற்காலை உரையாடாமை, துறந்த காலம் தொட்டு வாப் வாளாமை (மெளனம்) ஆகியவையாகும். தவம் செப்து யோகம் செய்வார்க்கு உரிய ன: இயமம், நியமம், ஆசனம், வளி கிலை {பிராணாயாமம்), தொகை நிலை (பிரத்தியாகாரம்), பொறை நிலை (தாரணை), கினைதல் (தியானம்), சமாதி என்பவை. (6) பாலறி மரபிற் பொருகர் : வாளானும் தோளானும் பொருதலும் வென்றி கூறலும். (7) அனை நிலை வகை மேற்கூறியவாறு வெல்லுதலன்றி அத்தன்மைத்தாகிய நிலைமையையுடைய பிற தொழில் வகையான் வெல்லுதல்: அஃதாவது, சொல்லான் வேறலும், பாட்டான் வேறலும், கூத்தான் வேறலும், குத்ான் வேறலும், தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும். இவற்றை உரையாசிரியர்கள் கூறும் எடுத்துக்காட்டுகளால் தெளி 23. புறத்திணை - நூற் 20-இன் உரை,