பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22ö தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை வாக அறியலாம். வாகைத்திணைக்கு உரியனவாக ஆசிரியர் பதினெட்டுத் துறைகள் கூறுவர். அவற்றுள் ஒன்பது மறத்தைச் சிறப்பித்தும், ஒன்பது அறத்தைச் சிறப்பித்தும் கூறப் பெறுகின்றன. காஞ்சித்தினை : காஞ்சி என்பது, நிலையாமை. அது செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என மூவகைப்படும், தனக்கு ஒப்பில்லாத சிறப்பென்னும் செம்பொருளைப் பெறுதல் காரணாக யாக்கை, இளமை. செல்வம் என்பவற்றால் நிலைபேறில்லாத இவ்வுலகியலைப் பற்றிக்கொண்டு அதனால் உளவரம் பலவகைத். துன்பங்களையும் பொறுத்து நிற்றலாகிய ஒழுகலாறே காஞ்சித் திணை பாகும். பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் கில்லா உலகம் புல்லிய நெறித்தே.கே (பாங்கு - துணை). என்பது தொல்காப்பிய விதி. கில்லாதவற்றால் சிலையுடைய தனை அடையும் முயற்சியே காஞ்சித்திணையாகும் என்பது தொல் காப்பியரின் கருத்து. அறம் பொருள் இன்பங்களை அளவறிந்து துகர்ந்து சிறப்பென்னும் செம்பொருளைக் காணும் பொருட்ே கிலையாமைகளைச் சான்றோர் கூறுவது காஞ்சித்தினையாகும். காஞ்சித்திணையை ஆசிரியர் தொல்காப்பியனார் ஆண்பாற் காஞ்சி, பெண்பாற் காஞ்சி என்று இரு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் பப்பத்துத் துறைகளாக இருபது துறைகளைக் கூறுவர். இக்தி இரு பகுதிகளும் இருபாலுக்கும் பொதுவேனும், சிறப்புடைமை கோக்கி அங்ஙனம் கூறப்பெற்றுள்ளன. பொதுவை பும் சிறப்பையும் அறிந்து அதற்கேற்பக் கொள்வது அறிவுடையோர் கடமையாகும். வாழ்க்கையில் நேரிடும் பலவகைத் துன்பங்களை யும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறும் முகத்தான், கிலையாமை என்னும் உண்மையை உள்ளபடி உணர்ந்து வாழ்க்கை யில் வெறுப்புக்கொள்ளாமல் அமைந்து வாழ வேண்டும் என்பதே காஞ்சித்தினையின் கருத்தாகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய "மதுரைக்காஞ்சி என்ற பாட்டின் நோக்கம் ஈண்டு உளங்கொள்ளற். 1.சில்து. பாடாண் திணை கொடையாளர்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடுவது பாடாண் திணையாகும். பாடாண் திணை - பாடு ஆண் 24. புத்திணை - நூற். 23 (கச்சி.)