பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட புறப்பொருள் 221 இணை - பாடப்படும் ஆண் மகனது ஒழுக்கம். அதாவது, பாட்டுடைத் தலைவனின் வீரம், கொடை, புகழ் முதலிய ஒழுக் கத்தைச் சிறப்பித்துப் பாடுதலாகும். பாடாண் என்பது, பாடுதல் என்ற வினையையும் பாடப்படும் ஆண் மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையுணர்த்தினமையின் வினைத் தொகைப் புறத்துப்பிறக்தி அன்மொழித்தொகையாகும் என்பர் கச்சினார்க்கினியர். குடும்ப வாழ்வில் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக்கமும், அரசியல் வாழ்வில் மேற்கொள்ளு தற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் அறுவகைப் புறவொழுக்கங்களுடன் ஆகிய இவ்வொழுக் கங்களை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை யொழுகலாறுகளும், அவற் றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும், பாட்டுடைத் தலைவன்பால் கிகழ்வன. பாடாண்திணையிலோ பாடுதல் வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காரணமாகிய குணம், செயல் ஆகியவை பாட்டுடைத் தலைவன்பாலும் கிகழ்வனவாகும். வெட்சி முதலிய ஆறும் தலைமகனுக்குரிய பண்புகளை நிலைக்களனாகக் கொண்டு தோன்றும் தனி நிலைத் திணைகள். பாடண் தினையோ தலைமகன்பால் சிகழும் மேற்கூறிய திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு சிலைக்களன்களாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத் திணை யாகும். எனவே, போர் மறவர்யால் அமைவனவாகிய வெட்சி முதலிய புறத்திணைகளிலும், குற்றமற்ற மனை வாழ்க்கையாகிய ஆகத்திணையிலும் அமைந்தி செயல்களாய்த் தலைமக்களுக்குரிய கல்வி, தறுகண், இசைமை, கொடை எனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கமைக்த ஒழுகலாது பாடாண் திணை என்பது பெறப்படும். பாடானல்லாத பிறவும் புலவராற் பாடப்படுவனவாயிலும் புலவசாற் பாடப்பெறுதல் வேண்டுமென்னும் மனக்குறிப்பின்றி ஒருவன்பால் தன்னியல் இல் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையால் அவை வெட்சி முதலிய திணைகளின்பாற் படுவனவென்றும், அப்பெயர்களைக் கருவாகக் கொண்டு புலவன் பாடும் போது அவற்றால் உளவாம் புகழை விரும்பும் கருத்துடன் பாட்டுடைத் தலைவன் பால் தோற்றும் உயர்ந்த உள்ளக்குறிப்பு பாடாண் தினையென்றும் பகுத்து உணர்தல் வேண்டும். நல்லறி வுடைய புலமைச் செல்வர் பலரும் உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் வண்ணம் ஆற்றல்மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க மனை வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் கன் மக்களது பண்புடைமையே பாடாண் திணை எனப்படும்.