பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை نیمه பா.சண் திணை, வெட்சி முதலிட ஆறு திணைகளையும் பாடுதல், தனக்கே உரிய பொருளைப்பாடுதல் என இருவகைப்படும். ஆெட்சி முதலிய திணைகளைப் பாடுதலாவது, பாடான் தலைவன் வெட்சி முதலிய தினைச்செயல்கள் திகழ்த்தியதாகப் பாடுதலாகும். தனக்கே உரிய பொருளைப் பாடுதலாவது, பாடாண் திணைக்கே உரிய பொருளைப் பாடுதலாகும். அது தேவர் பாடாண், மக்கட் பாடாண் என இருவகைப்படும். எனவே, வெட்சிப் பாடாண் தும்பைப் பாடாண் வஞ்சிப் பாடாண் வாகைப் பாடாண் உழிஞைப் பாடாண் காஞ்சிப் பாடாண் தேவர் பாடாண் மக்கட் பாடாண் எனப் பாடாண் திணை எட்டு வகைப்படும் என்றும் அறிதல் வேண்டும். மேற்கூறிய எட்டினை வேறு வகையாகவும் கூறுவதுண்டு. இளம்பூரணர், கடவுள் வாழ்த்து வகை ஆற்றுப்படை வகை வாழ்த்தியல் வகை பரிசில் துறை வகை மங்கல வகை கைக்கினை வகை செவியறிவுறுத்தில் வகை థu శ}శ్రీF Qf 8) & என்று வகைப்படுத்துவர். பாடாண் திணைக்கு ஒதுகின்ற பொருட். பகுதி பலவும் கூட்டி ஒன்றும், கிரை கவர்தல், கிரை மீட்டல் என்னும் வேட்சி வகை இரண்டும், பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பனவும் ஆக எட்டும் பாடாண் திணை வகை. யென வகுத்துரைப்பர் கச்சினார்க்கினியர். இனிப் புறத்தினை ஆறும் அன்பினைந்திணை கைக்கிளையாகிய அகத்தினை இரண் டும் ஆக இவ்வெட்டும் பாடாண் திணையின் வகையாகும் என்று. கூறுவாரும் உளர். மக்களை உயர்த்துத் தேவராக்கிப் பாடுதலும், உயர் பொருள் களை உயர்த்துப் பாடுதலும் தேவர் பாடாண் ஆகும். தேவரைப் பாடுதல் தேவர் பாடாண் பாட்டு என வழங்கப்பெறும். மக்களை மக்களாகவே பாடுதல் மக்கட் பாடாண் ஆகும். அது செக்துறைப் பாடாண் பாட்டு என வழங்கப்பெறும். பரவல், புகழ்ச்சி, காமம் என பாடாண் பொருள் மூவகைப்படும். வாழ்த்தல், புணர்ச்சி. வேட்கை என தெய்வப் பகுதி இரு பொருள் பெறும். வாழ்த்தல்