பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட புறப்பொருள் 223 புகழ்தல், புணர்ச்சி வேட்கை என மக்கட்பகுதி முப்பொருள் பேறும். அமரர்கண் முடியும் அறுவகை பாலும் புரை தீர் காமம் புல்லிய வகையிலும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப 2.* என்ற நூற்பாவினால் தேவர் பாடாண் இத்தகையது என்றும், வழக்கியல் மருங்கின் வகைப்பட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் மூன்னோர் கூறிய குறிப்பினும் செக்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே, லி என்ற நூற்பாவினால் மக்கள் பாடாண் இத்தகையது என்றும் விளக்குவர் ஆசிரியர். இவற்றுன் தேவர்க்குரிய பாடாண் இரு வகைப்படும், முதலாவது பிறப்பினாலன்றிச் சிறப்பினால் தேவ சாதியைச் சார்ந்தனவாகச் சொல்லப்பெறும் முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு என்னும் அறுவரையும் வாழ்த்துதல். இஃது அறுமுறை வாழ்த்து’ என வழங்கப்பெறும். தொகை நூல்களிலும் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த் தெல்லாம் இவ்வறுமுறை வாழ்த்தின்பாற்படும். இரண்டாவது - அத்தேவரிடத்தே சிறப்பில்லாத இம்மைப் பயன்களை வேண்டி அவர்பால் அக்குறிப்பைக் கூறுதல். இம்மைப் பயனை வேண்டு தலாவது, தன் பொருட்டேனும் பிறர் பொருட்டேனும் இம்மைச் செல்வங்களைக் காமுறுதல். இக்காம வகையில் புணர்ச்சி வேட்கை யைக் கடவுளரிடத்தும் கூறும் பகுதியும் உண்டு. அது முறை வாழ்த்தைப் போலவே கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றை பும் வாழ்த்தலும் உண்டு என்பர் ஆசிரியர். இம்மூன்றற்கும் பலர் தத்தம் அறிவின் திறத்திற்கேற்றவாறு பல்வேறு பொருள்கள் கூறுவர்,28 கடவுள் மக்கட்பெண்டிரை கயத்தல், கடவுளை மக்கட். பெண்டிர் சயத்தல் எனப்புணர்ச்சி வேட்கை இருவகைப்படும். 25. புறத்திணை - நூற். 26 (கச்சி.) 26. தை - நூற், 27 (கச்சி) 27. டிை - நூற். 33 (கச்சி.) 28. வெள்ளைவாரணனார், க, தமிழ் இலக்கிய வரலாறு . தொல்காப்பியம் - புறத்திணையியல் - பக். (108.110).