பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 1. அறிமுகம் இன்று தமிழ் மொழிக்கு ஒரு செல்வாக்கு வந்துள்ளது. எங்கும் தமிழ் முழக்கம் கேட்கப்பெறுகின்றது. சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்.” என்ற பாரதியாரின் வீர முழக்கத்தை இன்று ஒரளவு செயலளவில் பல துறைகளிலும் கேட்கின்றோம். இன்று எம்மருங்கும் தமிழ் மணம் வீசத் தொடங்கியுள்ளது. தமிழ்ச்சொற்பொழிவுகள், தமிழ்ச் செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், தமிழில் புதிய புதிய வெளி யிடுகள், பல துறைகளிலும் மொழிபெயர்ப்பு நூல்கள், ஒருசில முதல் நூல்கள் ஆகியவை இன்று தமிழ்த்தாய் பெற்றுவரும் புதிய ஏற்றங்கள். இந்தச் சூழ்நிலையிலும் பெரும்பாலான தமிழ்மக்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமையளித்துவரும் தொல்காப்பியத்தைப்பற்றி அறியாத நிலையையும் காண்கின்றோம். இந்த நிலை விரைவில் மாறவேண்டும். தமிழர் வாழ்க்கையின் உயிர்காடி போல் இலங்கும் தொல்காப்பியம் பொதுமக்களிடம் நன்கு பரவுதல் வேண்டும் அவர்களிடம் அது மிக்க செல்வாக்குப் பெற்றுப் புதிய ஒளியுடன் அவர்களிடையே உலவி, அவர்கள் வாழ்க்கையைச் செம்மையுறச் செய்தல் வேண்டும். தலைசிறந்த இலக்கணம் : தமிழ்மொழியின் தலைசிறந்த இலக்கணம் தொல்காப்பியம்: தமிழ் மக்களது பேரறிவின் கருவூல மாக இன்றுவரை கின்று நிலவுகின்றது. இஃது ஆசிரியர் தொல்காப் பியரால் இயற்றப்பெற்றது. இன்று கமக்குக் கிடைத்துள்ள 1. பாரதியார் கவிதைகள். தமிழ் - 2