பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. அகமும் புறமும் ண்ேடைத் தமிழ்மக்கள் உயிருணர்ச்சியை அகப்பொருள் என்றும், அஃதொழிந்த ஏனையெல்லாவற்றையும் புறப்பொருள் என்றும் பகுத்து ஆராய்ந்தனர். உயிர்கட்கு அகத்தே எழுகின்ற எண்ணங்கள் யாவும் புறப்பொருள்களுடன் இயைந்து காணப்பெறு கின்றன. அவற்றுள் சில அப்புறப்பொருள்களை நேரே பற்றிய எண்ணங்களாகவும், மற்றும் சில அக்கேரெண்ணங்களின் விளை வான வேறெண்ணங்களாகவும் தோன்றுகின்றன. இவ்வாறு புறப் பொருள்களைப்பற்றி கேரே எழும் எண்ணங்களைப் புறப்பொருள். இலக்கணத்திலும், அவ்வெண்ணங்களின் விளைவான வேறு நட்ப உணர்ச்சிகளையெல்லாம் அகப்பொருள் இலக்கணத்திலும் பண்டை யோர் பகுத்தோதியுள்ளனர். தொல்காப்பியர் முதலில் ஆகத் தினை இலக்கணங் கூறிப் பின்னர் அதற்கினமான புறத்தினை இலக்கணம் கூறுவர். ஆதலின், அவர் அப்புறத்தினை இலக் கனத்தில் பகுத்து எடுத்துக் காட்டும் கூறுபாடுகள் யாவும் அவர் தம் அகத்தினை இலக்கணக் கூறுபாடுகட்கு இனமுடையன. வாகவே இருத்தில் வேண்டும். அகத்திணைஇயல் கூறுகளை, ് கைக்கிளை முதலாப் பெருக்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப." என்ற நூற்பாவால் இனிது விளக்குவர் ஆசிரியர், அஃதாவது, ஆகத்தினைக் கூறுபாடுகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருக்திணை என ஏழாம். இவ்வாறு நிலை பெசாப் பகுப்புகளாகப் பிரித்தேசதப்பெற்ற அகத்திணைகள் ஏழற்கும் அவற்றிற்கு இனமாய புறத்தினைப் பகுப்புகளும் எழாதல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியனார் குறிஞ்சி முத லசன் ஏழு அகத்திணைகட்கும் முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, இம்பை வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு புறத்தினைகளை இல் மாக்கிக் காட்டுவர். அஃதாவது, 兹 镑 குறிஞ்சிக்குப் புறம் வெட்சி முல்லைக்குப் ஐ? வஞ்சி மருதத்திற்குப் 爱效 உழிஞை கெய்தலுக்குப் 參帶 தும்பை 1. அகத்திணை - நூற்பா 1