பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை களைப் பெற்றுள்ளன. உடம்பு மண்ணாலும், நாக்கு ரோலும், கண் தீயாலும், மூக்கு காற்றாலும், கrது வெளியாலும் ஆக்கப் துள்ளன. இப்புலனுடம்பை இவ்வைந்து வகையால்தான் பகுத் தாராய்தல் கூடும் என்பதும், இவற்றிற்கு மேலாகவோ குறைவாகவோ பகுத்தாராய்தல் இயலாது என்பது ஊகித்தறியக்கூடிய உண்மை களாகும். எனவே மண் முதலாகிய ஐந்து பொருள்களையும், மெய் முதலான ஐம்பொறிகளின் வாயிலாக உயிர்கள் செயல் புரிந்து, இ முதலான ஐந்து உணர்ச்சிகளையும் பெறுகின்றன என்பது .ெ தப்படும். உயிர்கள் செயல் புரியுங்கால் அவற்றின் உணர்ச்சிக்கு கேரே வருவன முறையே திண்மை, தண்மை, வெம்மை, ஊக்கம், கலப்பு என்ற ஐந்து உணர்ச்சிகளாகும். இவ்வுண்மையை, தீயின் வெம்மை செப்தோன், பொய்தீர் அனிற் கலப்பு வைத்தோன். மேதகு கசலின் ஊக்கங் கண்டோன், நிழல்திகழ் கீரில் இன்சுவை நிகழ்ந்தோன். வெளிப்பட மண்ணின் திண்ணை வைத்தோன். : என்ற மணிவாசகப் பெருமானின் கூற்றால் அறியலாகும். உயிர்களிடம் மேற்கூறிய திண்மை முதலான ஐந்துணர்ச்சி கட்கும் ஊறு முதலான ஐந்து உணர்ச்சிகட்கும் வேறாகப் பிற உணர்ச்சிகளும் உள. அவை கட்பு, அன்பு, அறிவு, காதல், அருள் என்பவை; இவை அக உணர்ச்சிகளாகும். மண் முதலான ஐந்து பொருள்களும் ஒன்றினொன் றடங்காத தனி முதற்பொருள்கள் ; இவை ஐக்தினும் ஏனைய பொருள்கள் யாவும் அடங்கி அமையும். கட்பு முதலான ஐந்து உணர்ச்சிகளும் ஒன்றினொன்றடங்காத வேறு வேறு தனி முதலுணர்ச்சிகளே. இவை ஐந்திலும் ஏனைய இயல்பு கள் யாவும் அடங்கி அமையும்: மண் முதலான ஐந்து பொருள்களை யும் துகராத உயிர்கள் யாண்டும் இல. அங்ங்னமே, கட்பு முதலிய ஐந்து உணர்ச்சிகளையும் உனா உயிர்கள் எவையும் இல. எனவே, உயிர்கள் யாவற்றிற்கும் மண் முதலான ஐம்பொருள் களாலும் திண்மை முதலான ஐந்து உணர்ச்சிகள் நேரே உண்டாகின்றன என்றும், இவ்வைந்து உணர்ச்சிகளும் ஊறு முதலான நுகர்ச்சிகளாக மாறுகின்றன என்றும், அவையே நட்பு முதலான வேறு உணர்ச்சிகள் ஐந்தையும் நுட்பமாய் விளைவிக் கின்றன என்றும் நாம் உணர்தல் வேண்டும். இவற்றுள் திண்மை முதலான ஐந்து புற உணர்ச்சிகளையே வெட்சி முதலிய திணை 4. திருவாசகம்- திகவண்டப் பகுதி- (அடி 22-26)