பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 233 கிலத்தின் கண் இருக்கும். பகைமேற்செல்லுதல், ஆண்டின் எல்லாக் காலத்திலும் நடைபெறும் செயல்; அங்ங்ணம் செல்லும் வஞ்சி மன்னன் இரவெல்லாம் பாசறையில் தங்கியிருந்து விடியற் காலையில் போர்க்கெழுந்து மதில் முற்றுவான். உழிஞைபொழுக் கத்திற்கும் அதன்கண் அடங்கும் கொச்சி யொழுக்கத்திற்கும் அரசர் அணியும் உழிஞைத்தழையும் கொச்சிப்பூவும் மருத கிலத்தில் உள்ளனவே. உரியபொருள் நிகழ்ச்சியிலும் இவ்வகப்புறத்திணை கள் மிகவும் ஒற்றுமையுடையனவாய் விளங்குகின்றன. புறத் தினை உழிஞையிலும் கோட்டைக்கு வெளியில் கிற்கும் அரசன் உள்ளிடத்தைக் கதுவ விழைகின்றனனாக, கோட்டையின் உள்ளி ருக்கும் அரசன் அதற்கு மறுத்து வாயிலடைத்துக்கொண்டு உள் ளிருக்கின்றனன். இன்னும், வீட்டினுள் கதவடைத்து நிற்கும் தலைவி உற்ற கேரத்தில் வாயிலைத் திறந்து தன் தலைவனோடு ஊடற்போர் புரிய விரும்புதல் போலவே, கோட்டையின் உள்ளிருக் கும் அரசனும் உற்ற கேரத்தில் வாயில் திறந்து வெளிப்பட்டுப் புறத்தரசனோடு போர் புரியவே விரும்புகின்றான். எனவே இவ்வாற்றான் உழிஞைக்கும் மருதத்திற்கும் உள்ள ஒற்றுமை துணுக்கம் விளக்கமாதல் காண்க. மேற்கூறிய கருத்துகளையே ஆசிரியர் கச்சினார்க்கினியர் * இருபெரு வேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர் செல்ற் காற்றாது போய் மதிலகத்திருந்த வேந்தனின் மதில் பெரும் பான்மையும் மருதத்திடத்ததாதலாலும், அம்மதிலை முற்று: வோனும் அங்கிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருத்தலொப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம் போல் இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையானும், சிறுபொழுதினும் விடியற்காலமே போர் செய்தற்குக் காலமாதலானும் உழிஞை மருதத்திற்குப் புறனா யிற்று' என்று விளக்குவர்.” இதனை மேலும் சற்று துணுகி கோக்குவோம். மருத நிலத்தில் மண் முதலான ஐம்பொருள்களிலும் தீயின் முனைப்பே கன்றாய் 7. புறம் 338 காண்க. இதில் பச்சைப்பசேலெனப் பயிர் பரந்த கழனிகளின் நடுவில் அமைந்திருக்கும் அரசனது கோட்டை பரணுக்கு லேப்பாயலை விரித்தாற் போன்ற நீர்ப்பரப்பினை யுடைய கடலின் நடுவிடத்தான கப்பலை உவமை காட்டி விளக்கி புள்ளார் ஆசிரியர் குன்றுர்க்கிழார் மகனார். 8. புறத்திணை - நூற். 9 - இன் உரை.