பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை விளங்குகின்றது. அத்தீயின் இயல்பே இரண்டற்கும் இடனாதல் வேண்டும். தீயின் இயல்பு வெம்மை என்பது மருத ஒழுக்கம், விடல்: தலைவி வேம்மையுடையளாப் கின்று தன் தலைவனோடு உண்டுகின்றமை வெம்மையொழுக்கமேயாகின்றது. உழிஞையரசனும் கொச்சியரசன்பால் வெம்மையுடையனாய் மதில் முற்றுதலின் அவனொழுக்கமும் வெம்மையொழுக்கமாகின்றது. தீயின் வெம்மை விளக்கத்தைக் கட்பொறியே கன்கு அறிகின்றது. ஊடற்போரிலும் கொச்சிப்போரிலும் மெய்முதலான ஏனை காற்பொறிகளினும் கட்பொறியே மிகவும் பயன்படுகின்றது. ஊடல் ஒழுக்கத்தில் தலைவன் தலைவியின்கண் உருத்தெழுந்த வெம்மையின் விளக்கத் தைக் காண்கின்றான். உழிஞை யொழுக்கத்திலும் இரு அரச கிடையேயுள்ள வெம்மை விளக்கத்தை அறிந்துகொள்ள ற்குக் கட்பொறியே மிக்குப் பயன்படுகின்றது. ஒளி என்பது வெம்மை இயல்பினதாதலின், அதனையுணரும் பொறி கட்பொறியேயாகும். மேலும், இக்க இரண்டு திணைகளில்தான் அறிவின் திறம் மிக்கு விளங்குகின்றது. வெட்சி முதலிய திணைகளில் பெரும் பசன்மையும் ஊக்கத்தினாலும் உடலுறுதியினாலுமே செயல் கள் கடைபெறுகின்றன. பகைவர் நெருங்க முடியாமல் சேரண், கிலவரண், மலையாண், காட்டாண் என்ற நால்வகைபரண்களையும் சூழ்ச்சிகளும் வஞ்சனைகளும் பொருந்த அமைத்து, அவற்றின் கடுவில் வலிமை சான்ற மதிலரண்கள் பலவும் கோட்டைகளும் எழுப்பிப் பல்வேறு வகையான போர்ப்பொறிகளையும், கருவிகளை யும் ஆண்டு கிறுத்தி, எத்தனை காள்களாயினும் அங்கேயேயிருந்து கொண்டு தனி வாழ்க்கை செலுத்தும் அருகிலையுடைய அகத்தரசர் புறத்தரசரோடு பொருதலும், இங்ங்னமே புறத்தரசரும் மேற் காட்டிய அணுகுதற்கரிய இத்தனை இடையூறுகளுக்கும் தப்பி அவ்வலிய அரண்களையும் அழித்து அகத்தரசனைக் கைப்பற்று தலும் அறிவின் திறத்தால் நடைபெறும் செயல்களன்றோ ? இங் கனமே, குறிஞ்சி முதலிய ஏனை நிலங்களைவிட மருத கிலத்தி லேயே வாழ்விடங்களும் வாழ்முறைகளும் நன்கு விளக்கம் பெற்றிருப்பதை அறிக. இனி, அகப்பொருள் ஒழுக்கத்தின் கண்ணும் ஏனைய முறைகள் யாவும் உடம்பின் தொடர்பால் இன்பம் விளைவிப்பனவாக, ஊடல்முறை மட்டிலும் அறிவுப் போரினால் இன்பம் விளைவிக்கின்றதைக் காண்க. எனவே, இவ்வாற்றால் மருதமும் உழிஞையும் அகப்புறமாய் இயைந்திருப்பதையும், தீப் 9. இதன் விளக்கத்தை இளவழகனார் எழுதிய பண்டைத் தமிழர் பொருளியல் வாழ்க்கை என்ற நூலில் காண்க. பக் - (78 - 79.) கழிக வெளியீடு