பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. எல்லா நூல்களுக்கும் முற்பட்ட முழுத் தமிழ் நூல் இது. இவை எல்லாவற்றையும்விடத் தொன்மையினாலும் ஆழ்ந்த பொருளுடை மையினாலும் மேம்பட்டுத் திகழ்வது. பின்வந்த தமிழ் இலக்கண ஆசிரியர்கட்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கம் போலிருந்து அவர் கட்கு வழிகாட்டியாக நிற்பது. சங்க காலத்தில் தோன்றிய நூல் என்று இதனை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இடைச்சங்கத் தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்று தொல்காப்பியம்' என்று குறிப்பிடுவர் களவியலுரையாசிரியர். குமரியாறு தமிழ் காட்டின் தெற்கு எல்லையாகத் திகழ்ந்த காலத்திலேயே இந்நூல் தோன்றிவிட்டது, காக்கைப்பாடினியார், குமரித் தீம்புனல்’ என்று: குறிப்பிட்டுள்ளமை இதனை வலியுறுத்தும். இடைச்சங்க காலம் கி. மு. 2000-க்கு முற்பட்டதென்று ஆய்வாளர்கள் துணிக் துள்ளனர். நூலின் தொன்மை மட்டிலும் அதற்குப் பெருமையளிக் கின்றது என்று கருத வேண்டா; அதன் செம்மையும் கம்மை அதன்பால் ஈர்க்கின்றது. தமிழ் கூறும் கல்லுலகம் : அக்காலத்தில் மக்கள் பேசும் மொழியையொட்டி நாடு பிரிவினை செய்யப்பெற்றிருந்தது. தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் காடு தமிழ்நாடு’ என வழங்கப். பெற்றது. இதனைத் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கிய-அதாவது முன்னுரை இந்தி-பனம்பாரனார் தமிழ்கூறும் நல்லுலகம்’ என்று குறிப்பிடுகின்றார். இக்காட்டின் எல்லைகளைப் பற்றியும் அவரே கூறியுள்ளார். வடக்கே வடவேங்கடமும் தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்கு ஆகிய இரண்டு திக்குகளில் கடலாகவும் அமைந்த எல்லைக்குள் அடங்கிய நிலப்பரப்பே ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாடு. ஆனால், பனம்பாரனார்: கடல் எல்லைகளைக் குறிப்பிடவில்லை, அந்தத். திசைகளில் மக்கள் வாழும் காடுகளின்றிக் கடல்களே இருக்தன வரதலின் அவ்வெல்லைகளை வரையறை செய்யாதுவிட்டனர் போலும், "வடவேங்கடம் தென்குமரி ஆபிடைத் தமிழ்கூறும் கல்லுலகத்து’ என்பது அவருடைய திருவாக்கு. இரண்டாம் முறையாக நிகழ்ந்த கடல்கோளுக்குப் பின் எஞ்சியிருந்த தமிழகத்தின் எல்லையினையே இளங்கோவடிகள், 2. பனம்பாரனார். தொல்காப்பியனாரின் ஒருசாலை. மாணாக்கர்.