பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 6 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை படும். கெய்தலைச் சார்ந்த மணல் திட்டுகளில் இத்தும்பைப் பூக்கள் ஏராளமாகப் பூத்திருத்தலை நாம் நன்கு அறிவோம். தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் பிரிந்தக்கால் கெய்தல் கிலத்தின் கடற்காற்றும் கானற்காற்றும் ஊறி மாலைப் பயனும் பொழிற்பயனும் நுகர்க்து, அவ்வாற்றால் தம் துணையை கினைந்து பிரிவாற்றாமல் இரங்குவர். போர் நிகழ்ச்சியிலும் இக் கேரத்தில் ஆண்டுள்ளார்க்கு இரக்கவுணர்ச்சி தோன்றி கிற்கும். தன்னலங்களனைத்தினையும் பொருட்படுத்தாமல் போர் முனையில் வீரத்துடன் பொருது விழுப்புண் பட்டு விழும் மறவர்களைப்பற்றி மாற்றாரும் மற்றையோரும் இரங்குவர். இவ்வுண்மையைத் தொல்காப்பியர் வாளோராடும் அமலை’ என்ற துறையால் சிறப்பித்துள்ளார். பகையினால் வீர முனைப்பும் இவர் வீழ்ச்சி யினால் இரக்க முனைப்பும் எழுந்தாலும், அவற்றுள் சிறப்புடையது இசக்கமே ; அதுவே போர் கிகழ்ச்சியின் முடிந்த பயனாகக் கொள்ளப் பெறும். மேலும், போர்க்களத்தில் இறந்துபட்ட வீரர்களின் பெண்டிர் அங்குச் சென்று விழுப்புண் பட்டு வீழ்ந்து கிடக்கும் தம் கணவன்மாரைத் தழுவிக்கொண்டு கண்ணிர் விட்டு இரங்குவர். கச்சினார்க்கினியரும், கெய்தற்குரிய பெருமணல் உலகம் போலக் காடும் மலையும் கழினியும் அல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும்பொழுது வரைவின் மையானும், எற்பாடு போததொழில் முடியும் காலமாதலானும், இரக்கமும் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறு போலக் கணவனை இழந்தார்க்கன்றி வீரரக்கு இரக்கமின்மையானும், அவ்வீரக் குறிப்பின் அருள் பற்றி ஒருவர் ஒருவரை கோக்கிப் போரின்கண் இரங்குடவாகலானும், ஒருவரும் ஒழியாமல் பட்டுழிக் கண்டோர் இரங்குபவாகலானும், பிற காரணங்களாலும் நெய்தற்கு த தும்பை புறனாயிற்று.”* என்று துணுக்கமாக எடுத்துக்காட்டியுள்ளார். - இதனை மேலும் துணுகி ஆராய்வோம். நெய்தல் கிலத்தில் மண்முதலான ஐமபொருள்களிலும் காற்றே மிகுந்து தோன்றும். கடல் பெரும் பரப்புடையதன்றோ ? காற்றின் தன்மை ஊக்கம்’ என்பது அஃது ஒரு கருத்தில் முனைப்புடைய தன்மையாகும். போர் நிகழ்ச்சியில் பெரிதும் பயன்பட்டது இதுவே. தலைவன் தலைவியரும் தம் துணைவரைப் பிரிந்த நிலையில் ஒரே முனைப்பாக கின்று இரங்கியது இவ்வூக்கத்தினாலன்றோ ? நெய்தல் நிகழ்ச்சியில் கடற்காற்றினை மல மணமாக முகர்ந்துணரந்தது மூக்கு: போர் நிகழ்ச்சியிலும் வீரர்கள் இப்பொறியினாலேயே, 11. புறத்திணை - நூற். 17 (கச்சி.) 12. புறத்திணை நூற். 14 (கச்சி.) உரை.