பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. மெய்ப்பாடு-விளக்கமும் தொகையும் மெய்ப்பாடு என்பது, வெளிப்படுவது என்று பொருள்படும். ஊன்றி கோக்கின், சுவையுணர்ச்சியே விருப்பு, வெறுப்பு முதலியவைகளைத் தந்து கண்ணிரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்க்குறிகளுடன் வெளிப்படுவதாதலின் சுவைக்கு மெய்ப்பாடு என்னும் பெயர் பொருந்துவதாயிற்று. சுவை யெனினும் மெய்ப்பாடு எனினும் ஒக்கும். சுவைகளின் தன்மையை மேலும் சிறிது விளக்குவோம். சுவை விளக்கம் : இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு என்பன ஆறு சுவைகள்” என்பதை நாம் அறிவோம். இவை காவாகிய பொறி வழியாக ஒருவர் உள்ளததே தோன்றும் உணர்ச்சிகளாகும். இவ்வுணர்ச்சிகளைத் தரும் .ொருள்கள் முறையே கரும்பு, வேம்பு, புளி, உப்பு, கடுக்காய், மிளகு போன்றவைகளாகும். இவை சுவைப்பொருள்கள்’ ஆகும். கரும்பினை காவாகிய பொறியாற் சுவைத்துணரு மிடத்து இனிப்புச் சுவையுணர்ச்சி தோன்றும் , அங்ங்னம் தோன்றுங்கால் ஆஇ காரணமாக விருப்புத் தோன்றும். இங்ஙனமே வேம்பினைச் சுவைத்துனருமிடத்து கைப்புணர்ச்சி தோன்றும்; அது தோன்றுங்கால் வெறுப்புத் தோன்றும். இங்ங்னம் உள்ளத்தே தோன்றும் விருப்பு வெறுப்புகள் உள்ளக் குறிப்பு கள் என்று கூறப்பெறும். இத்தகைய உள்ளக் குறிப்பு களைக்கொண்டு இச்சுவையுணர்ச்சிகள் வெளிப்படுங்கால் முக மலர்ச்சி, முகச்சுளிப்பு முதலாய மெய்க்குறிகளைக்கொண்டு பிறர் அறியுமாறு வெளிப்படும். இம்மெய்க்குறிகளே விறல் அல்லது 1. விறல் - பத்து வகைப்படும். அவை மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணிர் வார்தல், கடுக்கமெடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு என்பன. அவ்விறல், சுவைகளிலே மனக்குறிப்பு உளதாய வழி உடம்பிலே தோற்றும் உடம்பினும் முகத்து மிகத் தோற்றும் , முகத்தின் மிகத் தோற்றும் கண்ணில் கண்ணின் மிகத் தோற்றும் கண்ணின் கடையகத்து. இவை எட்டென்பது வடநூலார் மதம். (சிலப்-பக். 34 உ. வே. சா. அய்யர் பதிப்பு. சுப்பு ரெட்டியார், க. கவிதையனுபவம், கழக வெளியீடு) என்ற து.ாலிலும் காண்க,