பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இங்குக் காணப்படும் முப்பத்திரண்டும் ஒருவகை. இனி, மற்றொரு வகையிலும் இச்சுவைகள் முப்பத்திரண் டாகிய வகையினைப் பெறும். அது வருமாறு : சுவைகள் சுவை தோன்றும் கிலைக்களங்கள் (பொருள்கள்) 1. இகை எள்ளல், இளமை, பேதைமை, மடன். 4 2. அழுகை இளிவு, இழிவு, அசைவு, வறுமை. به 3. இளிவரல் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை 4. கி. மருட்கை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம், 4 3. அச்சம் அணங்கு, விலங்கு, கள்வர், இறை. 4 தி. பெருமிதம் கல்வி, தறுகண், இசைமை, கொடை. 4 7. வெகுளி உறுப்பறை, குடிகோள், அலை, கொலை 4 8. உவகை செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு4. 32 --- இங்குக் காணும் முப்பத்திரண்டும் மற்றொரு வகை. சுவை தோன்றுமாறு : சுவைகளின் தோற்றத்தையும் தொகை யினையும் தொல்காப்பியர், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே கானான் கென்ப.3 என்று கூறுவர். மெய்ப்பாடு என்பன பண்ணை என்பதன் வழியாகத் தோன்.தும் அவை முப்பத்திரண்டு பொருளாம். அவற்றாற் கருதப்பெறும் பொருட்பகுதி பதினாறாக அடங்கும் என்பது இந்நூற்பாவில் குறிக்கப்பெறும் பொருட்சுருக்கமாகும். இது காடகவியலார் கொள்கை என்பதும், தொல்காப்பியர் இக் கொள்கையினை முதலில் எடுத்துக் காட்டி மேலே தம் கொள்கை. யினைக் கூறுகின்றார் என்பதும் உரைகாரர்கள் கருத்தாகும். இக்கருத்தினை டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் மறுத்திடுவர் : அவர் உரை கோக்கி அறிக.. இதுபற்றி இளம்பூரணர் கூறுவது : "இங்குக் கூறிய பண்ணை என்பது விளையாட்டு : இஃது ஆகுபெயராகி விளையாடும் ஆயத் 3. மெய்ப்ற்ெ. (இளம்) 4. சோமசுந்தர பாரதியார், ச. டாக்டர் : மெய்ப்பாட்டியல் உரை, பக். (221)