பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாடு - விளக்கமும் தொகையும் 243 தினைக் குறிக்கும்; இந்த ஆயம் கற்று வல்லாாப் கல்லொழுக்கம் மேற்கொண்ட அறிவுடையார் கூட்டம் அன்று இந்த ஆயத் தாரிடைத் தோன்றுவனவாய், மேற்கூறியாங்கு சுவை தோன்றும் எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகவுள்ள (இரண்டாம் வகையாட} முப்பத்திரண்டு பொருள்களின் புறத்தே தோன்றுவனவாப் உள்ளன. பதினாறு மெய்ப்பாடுகள் ; அதுை சுவை எட்டு, சுவை களின் குறிப்பு எட்டு எனப் பதினாறாகும்." பேராசிரியர் கூறுவது : பண்ணை என்பது முடியுடை வேக் தரும் குறுகில மன்னரும் முதலாயினோர், காடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டு என்பதும், அதனைக் கூறும் இாடக வழக்கிற்கு உரிய பகுதிகள், முற்கூறியாங்கு பொருள், சுவை, குறிப்பு, விறல் என்ற நான்கு வகைகளால் ஆன முப்பத்திரண்டு ஆகும் என்பதும் (முதல் வகை முப்பத்திரண்டு), அவை தாமும் பொருளும் சுவையும் ஒன்றாக எட்டும், குறிப்பும் சத்துவமும் ஒன்றாக எட்டும் ஆகி, இங்ங்ணம் பதினாறாக அடங்கும்.” எனவே இவ்விரு உரையாசிரியர்களும், இங்குக் கூறிய பண்ணை என்பது இன்னது, முப்பத்திரண்டாவன இன்னவை: என்பதில் பெரிதும் கருத்து மாறுபடினும் அவை பதினாறாக முடியும் பொருள் இன்னவை என்பதில் ஒன்றிய கருத்தினரrதலை அறிக.* வடதுரலாக் கொள்கை : சுவைகளின் இயல்பினையும், அவை உண்டாகும் முறையினையும், அவற்றின் வகைகளையும் பற்றி வடமொழி இலக்கணம் கூறும் கருத்துகளை ஈண்டறிதல் சாலப் பயன் தரும். மக்கள் உள்ளத்தில் ஒவ்வொருகால் எழும் உள வேறுபாடு பாவம் எனப்படும். பாவங்களுள் சில நிலை பெற்றிருக்கும் ; பல சிறிது நேரம் கின்று மறையும். தனக்கு ஒற்றுமையுடையனவும் வேற்றுமையுடையனவுமாகிய பிற பாவங் களால் கேடுறாமல்" ரஸமாகிச் சமையுமளவும் கிலை கிற்கும் பாவம்

  • இனிமேற் கூறும் கருத்துகள் யாவும் பன்மொழிப் புலவர உயர்திரு. வே, வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்களின் சுவை யியல்’ என்ற கட்டுரையைத் தழுவினவை,

5. ஒற்றுமையுடைய, பாவத்தால் கேடுறாமல; லைபெறுத லாவது . ஒரு மாதினைக் கண்டு அவளிடம் காதல் கொண்டா னொருவன், பின்னர் வேறொரு மாதினைக் காணும் போது பின்னவள்பால் காதல் செலுத்தாது, முன்னைய மாதின் கினைவு உண்டாகி, அவள்பால் காதல் கொள்வது. வேற்றுமையுடைய பாவத்தால் கேடுறாமல் நிலை பெறுதலாவது - ஒரு மகள்பால் காதலித்தான் ஒருவன் பின்னர் இளமகள் ஒருத்தியின் சாவு, பிரிவு: முதலியவற்றைக் கண்டவிடத்தும், அவற்றால் சோகமும் வெறுப்பும் உண்டாகி, முன் காதலிக்கப்பட்டவரிடத்து முன்னைய காதல் கொடாதிருப்பது.