பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. சிருங்காரம் ஒன்றே சிறந்தது என்றும், அதிலிருந்தே ஏனையவை தோன்றின என்றும் கூறுவர். இது முதல் ரஸ்மாகக் குறிப்பிட் டிருப்பதே அதன் சிறப்பை புணர்த்துகின்றதென்றும், அதுவே இலக்கியங்களில் அதிகமாகக் கையாளப்பெற்றுள்ளது என்றும், அதன் காரணமாகவே அது தளங்களின் மன்னன்’ என்று வழங்கப் பெறுகின்றது என்றும் அவர்கள் கூறுவர். பிறிதொரு சாரார் அற்புத ரஸ்த்திறகு முதலிடம் தக்து, அதிலிருந்தே ஏனையவை தோன்றுகின்றன என்று பகர்வர். மேற்கூறிய ஒன்பது ரஸங்களுக்கும் உரிய ஒன்பது பாவங்களும் எல்லா உயிர்களிடத்தும் பற்றியிருக்கும். ஆனால்சிலருடைய மனோ விருத்திகள் பல பிறப்புகளிலுள்ள வாஸனை மிகுதியினால் சில பாவங்களில் மிக்குச் செல்லும் ; சிலவற்றில் குறைந்திருக்கும். அதனால், இவை அறவே இல்லாதிருக்கும் என்று கருதுதல் தவறு. வீரத்திற்குக் காரணமாகிய உற்சாகம், பயானகத்திற்குக் காரண மாகிய அச்சம், ரெளத்திரத்திற்குக் காரணமாகிய குரோதம் ஆகியவை எல்லா உயிர்களிடத்தும் மிக்குக் காணப்படாமைக்குக் காரணம் பரம்பரையாகிய வாலனைகளின் குறைவே. சிருங்காரத்திற்குக் காரணமாகிய காதல் எல்லா உயிர்களிடத்தும் காணப்படுவதற்குக் காரணம் பரம்பரை வாஸ்னையின் மிகுதியே. ஆதலின், இவ்வெல்லாச் சுவைகளையும் எல்லா உயிர்களும் ஒரே பிறப்பில் அனுபவித்தல் அரிது. இனி பக்தி, வாத்ஸல்யம் முதலியவற்றையும் ஒருசிலர் கவைகளாகக் கூறுவர். அது தவறு ; அவையெல்லாம் பாவங்களேயாகும். பக்தி ரஸம் என்பது உபசாசமாக வழங்கு வதல்லது காப்பியச் சுவைபற்றிய சிறந்த நூல்களில் வழங்குதல் இல்லை. எனவே, சுவை ஒன்பது என்பதே நூலாசிரியர் அனைவ. ருக்கும் ஒப்ப முடிந்த கொள்கை சுவைகின் தன்மை : உலகியல் கிகழ்ச்சிகளிலும் செயல்: களிலும் உண்டாகும் இன்பத்தை ரஸம் என்று கொள்ளுதல் பொருந்தாது. என்னையெனின், ஒரு சுவைக்குக் கூறும் இலக் கணம் எல்லாச் சுவைகட்கும் பொருந்துதல் வேண்டும் உல கியற்செயல்களுள் நகை, காதல் முதலியவற்றில் இன்பம் உண்டாதல் போன்று, அழுகை, இளிவரல், அச்சம், வெகுளி முதலியவற்றில் இன்பம் உண்டாதல் இல்லையன்றோ ? இத னால் உலகியலின்பத்தைச் சுவையென்று கொள்ளாமல் வீடுத்து, காடகத்திலாவது காவியத்திலாவது அச்செயல்கள் நிகழுங்கால் அவற்றைக் காண்டலும் கேட்டலும் செய்யும் நல்லறிவாளருள்ளத்தில் விபாவம் முதலியவற்றால் உண்டாகும் சுவையே சலம் என்று அலங். காரநூலார் அறுதியிடலாயினர். ஒரு தாய் தன் இளமகன் இறந்ததைக்