பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாடு-விளக்கமும் தொகையும் 249 குறித்து அழுதலைக் கேட்குங்கால், நமக்கு உண்மையிலேயே துயரம் உண்டாகின்றது. ஆனால், சந்திரமதி தன மகனை கினைந்து அழுததாகவுள்ள பாட்டுகளையும் மேகநாதன் இறந்தமை குறித்து மண்டோதரி புலம்புவதாகவுள்ள பாடல்களையும் படிக்கும் பொழுது இன்பம் உண்டாகிறது. இது பற்றிய ஒரு சில கருத்துகள உளவியல் அடிப்படையில் ஆராயப் பெற்றுள்ளன. ஆண்டுக் கண்டு கொள்க, சிருங்கார வகை : வடமொழி இலக்கண நூலார் சிருங் காரத்தைச் சம்போக சிருங்காரம், விப்ரலம்ப சிருங்காரம் என இரு கூறுபடுத்திப் பேசுவர். இவ்விரண்டு வகையோடும் தொடர்புடைய செய்திகளே தொல்காப்பியத்தில் களவியல், கற்பியல என்ற பகுதிகளில் கூறுப்பெறுகின்றன. அவை இச்சுவையின் தொடர் புடையன என்று தொல்காப்பியர் கூறவில்லையெனினும் அவர் அமைத்த முறைகளும் செய்திகளும் இதனுள் அடங்குவனவாயின. பரிமேலழகரும் காமத்துப் பாலில், "இது புணர்ச்சி, பிரிவு என இரு வகைப்படும். ஏனை இருததல், இரங்கல், ஊடல் என்பனவோ வெனின், இவர் பொருட்பாகுபாட்டினை அறம் பொருள் இன்பம் என வடநூல் வழக்குப் பற்றி போதுதலான் அவ்வாறே அவற்றைப் பிரிவின்கண் அடக்கினார் என்க. இனி, அவைதம்மையே தமிழ் நூல் களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மைபற்றி வகுத்து, அவற்றைச் சுவை மிகுதி பயப்ப உலக நடையோடு ஒப்பும் ஒவ்வாமையும் உடைய வாகிக் கூறுகின்றார்' என்று கூறியிருப்பது ஈண்டு அறியத் தக்கது.8 தொல்காப்பியத்தின் பெருமை : மெய்ப்பாடு, உவமை பற்றித் தொல்காப்பியத்தில் காணப்பெறினும் அணியிலக்கணத்தைப் பற்றிய தனி நூல் பழங்காலத்தில் தமிழில் இல்லை. வடமொழி யிலுங்கூட அலங்காரத்தை வரையறுக்கும் இலக்கணம் பிற்காலத்தே தான் தோன்றியதென்று ஆய்வாளர்கள் கூறுவர் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் எழுந்த நூல்களில்தான் அலங் காரத்தைப்பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன என்றும், முறையாக அலங்கார இலக்கணத்தை ஆராயும் கிலை கி.பி. 4, 5ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே விரிவடைந்ததென்றும் வடநூலறிஞர்கள் 8. சுப்பு ரெட்டியார், : கவிதையனுபவம் (கழக வெளியீடு). 9. இக்கால அறிஞரகளுள் சிலர் இக்கருத்தினை ஒப்புக் கொள்வதில்லை. 10. History of Sanskrit Poetics, Vol. I p. 17.