பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயவற்றையும் இழத்தல் (பேரா.) உயிரானும் பொருளானும் இழத்தல் (இளம்), அசைவு என்பது, பண்டை கிலைமை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல் பேரா.j; அசைவு - தளர்ச்சி; தன்னிலையில் தாழ்தல். வறுமை என்பது போகக் துய்க்கப்பெறாத பற்றுள்ளம் (பேரா.): நல்குரவு இளம்). இவை நான்கும் தன்மாட்டுற்றதினாலும் பிறன் மாட்டுற்றதனானும் அழுகை பிறக்கும். (க) இளிவு பற்றி வரும் நகை (அ) தன்கன் தோன்றிய இளிவு பற்றிய அழுகை : ஒரு தோழி தலைவனை நோக்கி, “நீ பரத்தையை இகழ்ந்து கைவிட்டனை ; அதனால் இளிவெய்திய அவள் அழுதனள்: என்கின்றாள். எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி வடித்தென உருத்த தித்திப் பல்ஊழ் கெடித்தெனச் சிவந்த மெல்விால் திருகுபு கூர்நூனை மழுகிய எயிற்றள் ஊர்முழுதும் நுவலுகிற் காணிய சென்மே. என்ற தோழி தலைமகனை வாயில் மறுத்ததாக வந்த அகப் பாட்டின் (அகம். 176) அடிகளில் பரத்தை தன்கண் தோன்றிய இளிவு பற்றி அழுத அழுகையைக் காண்க. (ஆ) பிறன்கண் தோன்றிய இளிவு பற்றிய அழுகை: ஒரு தலைவன் தோழியிடம் பன்னாளும் அலைந்து இளிவுறு கின்றான். அதுபற்றி அவலங்கொண்ட தோழி தலைவியிடம் சென்று, தலைவன் இளிவெய்துவது பற்றித் தான் அவலம் உறுவதைக் கூறுகின்றாள். சேயேன்மன் யானுக் துயருழப்பேன்" என்ற கலிப்பாட்டடியில் (கலி.-37) தலைவன் இளிவு பற்றித் தோழி அவலம் உறுவதைக் காண்க. (உ) இழவு பற்றி வரும் அழுகை (அ) தன்கண் தோன்றிய இழிவு பற்றிய அழுகை : இராவணன் தன் அருமைப் புதல்வன் மேகநாதன் இறந்தது. பற்றி மனம் கொந்து பலவாறு புலம்புகின்றான்.