பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் శ్రీ வந்தவை. இதைச் சில நூற்பாக்களில் காணப்பெறும் என்ப’, "என்மனார் புலவர் என்பன போன்ற தொடர்கள் வலியுறுத்தும். நூல் பாகுபாடு : தொல்காப்பியம் இயற்றமிழுக்குரிய ஒர் இலக்கண நூல். அஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பிரிவுகளையுடையது. ஒவ்வோர் அதிகாரத்திலும் இயல்கள்’ என்று பெயர் கொண்ட ஒன்பது சிறு பிரிவுகள் உள்ளன. எழுத்துப்பற்றிய இலக்கணச் செய்திகளை முறைப்படுத்திக் கூறுவது எழுத்ததிகாரம் : இப்பகுதியில் 483 நூற்பாக்கள் உள்ளன. சொல்லதிகாரம் தமிழ் மொழியிலுள்ள பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற கான்கு வகைச் சொற்கள் பற்றியும், அவற்றோடு இயைபு உள்ள வேற்றுமை போன்ற மொழி மரபுகளைப்பற்றியும் கூறுகின்றது. இப்பகுதியிலுளள மொத்த நூற்பாக்கள் 463, பொருளதிகாரத் தில் 656 நூற்பாக்கள் உள்ளன. அவ்வதிகாரத்தில் மனித வாழ்க்கைக்கு நன்மை பயப்பனவும் உயிர்க்கு உறுதி பயப்பனவும் கூறப்பெற்றுள்ளன. பரந்து கிடக்கும் இந்தப் பொருளைத் தொல்காப்பியர் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வகுத்துப் பேசுவர். உலகிலுள்ள எல்லாப் பொருள்களை யும் இந்த மூன்று பிரிவுகளில் அடக்கிவிடலாம் என்பதைத் தொல்காப்பியத்தைப் படிப்பதால் அறியலாகும் உண்மை. முந்து நூல் : வழக்கும் செய்யுளும் என்ற தொடரிலேயே தம் காலத்துத் தமிழ் நூல் வழக்கினைக் குறித்த பனம்பாரனாச் மீண்டும் ஒருமுறை முந்து நூல்" எனக் குறிப்பிட்டது என்ன ? குமரி நாட்டினைக் கடல் கொள்ளுவதற்கு முன் அமைந்த செந்தமிழ் நாட்டினையும், ஆண்டு முற்பட்டுத் தோன்றிய தொன்னூல்களையும் குறித்தற்கே மீண்டும் ஒரு முறை முந்து நூல் என்ற தொடரால் குறித்தார் எனக் கோடல் வேண்டும். இங்ங்னம் பொதுவாகக் கூறியதனால் இயல், இசை, நாடகம் என்னும் பல்வேறு துறை. களைத் தழுவி எழுதப்பெற்றுத் தொல்காப்பியனார் காலத்தில் கிடைத்த எல்லா நூல்களையுமே இத்தொடர் குறிப்பதாகக் கொள்ளலாம். அகத்தியரும் தொல்காப்பியரும் : இந்த இருவரும் ஆசிரியரும் மாணாக்கரும் ஆவர் என்று தொடர்புபடுத்திக் கூறும் பன்னிரு. படலப் பாயிரம், புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் ஆகியவை குறிப்பிடும் செய்திகளை இக்காலத்து ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்வதில்லை. காரணம், அவை யாவும் தொல்காப்பிய னாரின் ஒருசாலை மாணாக்காாகிய பனம்பாரனாரின் சிறப்புப்