பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதினைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 269 சோரத்திற் கொண்டதில்லை-அண்ணே ! சூதிற் படைத்ததில்லை : வீரத்தி னாற்படைத்தோம்-வெம்போர் வெற்றியி னாற்படைத்தோம். இப்பாடலில், வீமன் திரெளபதியைப் பெற்ற தம் புகழை கினைந்து கூறுவதைக் காண்க. (ச) கொடைபற்றி வரும் பெருமிதம் போர்க்களத்தில் கண்ணனுக்குத் தம் புண்ணியம் அனைத்தும் உதவிய பிறகு கன்னன் தன் கொடைபற்றிய பெருமிதத்தால் பேசுகின்றான். தருமன்மகன் முதலான அரிய காதல் தம்பியசோ டெதிர்மலைக்து தறுகண் ஆண்கைச் செருவில்என துயிர் அனைய தோழிற் காகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தேன் ; தேவர் கோவுக்கு உரைபெறுகற் கவசமும் குண் டலமும் சந்தேன்; உற்றபெரு கல்வினைப்பே துனக்கே தக்தேன், என்ற பாடற்பகுதியில் (வில்லி பாரதம்-பதினேழாம் போர்ச் - 248) கன்னனின் பெருமிதத்தைக் காண்க. 7. வெகுளி வெகுளி என்பது, உருத்திரம் (சினம்) அதன் இயல்பினை ஆசிரியர், உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான் கே." என்ற நூற்பாவால் கூறுவர். இவற்றுள் உறுப்பறை என்பது கையை வெட்டுதலும் கண்ணைத் தோண்டுதலும் போன்ற கொடுஞ் செயல்கள். குடிகோள் என்பது, பிறரது குடிப் பிறப்பின் உயர்வுக்கும் அவருடைய சுற்றத்தார்க்கும் கேடு சூழ்தல். அலை என்பது, அரசியல் நெறிக்கு மாறாகக் கோல் கொண்டு அலைத்தல் முதலிய தித்தொழில்கள். கொலை என்பது, பிறருடைய அறிவும் புகழும் முதலிய நன்மைகளை அழித்துப் பேசுதல், இங்ங்னம் நால்வகைப் படக் கூறப்பெற்ற இக்கொடுஞ்செயல்கள் காரணமாக மக்களது 9. மெய்ப்ற்ெ. 10 (இனம்.)