பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை. மனத்தே வெகுளி தோன்றுதல் இயல்பு. இது பிறர்கண் தோன்றிய பொருள்பற்றியே வரும். "இப்பொருள் கான்குன் தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க’ என்பர் இளம்பூரணர். {க) உறுப்பறை பற்றி வரும் வெகுனி தன்னுடைய மூக்கும் காதும் சுக்கிரீவனால் அழிந்தமை கண்டு கும்பகருணன் சினங்கொள்ளுகின்றான். எண்ணுடைத் தன்மையன் இனைய எண்ணிலாப் பெண்ணுடைத் தன்மைய தாய பீடைபால் புண்ணுடைச் சேவியொடு மூக்கும் பொன்றலால் கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன. என்ற கம்பராமாயணப் பாடலில் (கும்பகருணன் வதைப் - 297). கும்பகருணன் கொண்ட சினத்தால் அவன் கண்கள் குருதியை வெளிப்படுத்தியதைக் காண்க, (உ) குடிகோள் பற்றி வரும் பெருமிதம் ஒரு வீர மகள் தன் மகன் போர்க்களத்தில் புறங்காட்டி மாண்டுத் தன் மறக்குடிக்குக் கேடு சூழ்ந்தான் என்று அம்மகன் மீது சிவகுள்கின்றாள். ன்ே மகன், படையழிக் து மாறினன் என்று பலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டஅென் முலையறுத் திடுவென் யானெனச் சினை இ’ என்ற புறப்பாட்டடிகளில் (புறம்-278) ஒரு வீசத்தாப் சினந்து. வீரம் பேசுவதைக் காண்க. (-) அலைபற்றி வரும் வெகுளி ஒரு யானை ஒரு புலியோடு அலைப்புண்டு வெகுளி எய்திப் பின் அதனை அலைத்தும் சினம் நீங்கீலது. வரிவயம் பொருத வயக்களிறு போல இன்னும் மாறாது சினனே, என்ற புறப்பாட்டிகளில் (புறம்-100) யானை புலியால் தான் எய்திய அலைப்புப்பற்றி வெகுண்டமை அறிக.