பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தொல் காப்பியம் காட்டும வாழ்க்கை 2 (11) சூழ்ச்சி என்பது, சுழற்சி. சூழ வருவானைச் சுழல் வரும் என்பவாகலின், அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன் கண் தோன்றின் அதுவும் மெய்ப்பாடு : அஃதாவது, மனத்தடு மாற்றம். சூழ்ச்சியை எண்ணம் என்பர் இளம்பூரணர். எ.டு. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொனல். என்ற குறளில் (குறள்-445) வந்துள்ளது ஒரு மனநிகழ்ச்சி. (12) வாழ்த்தல் என்பது, பிறரால் வாழ்த்தப்படுதல் ; இது பிறவினையன்றோவெனின், ஒருவனை டுே வாழ்க’ என்று வாழ்த் தல் பிறவினையாயினும் அவற்றான் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறுதல் அமையும் என்பது. வாழ்த்தல் என்பதைப் *பிதனை வாழ்த்தல்' என்பர் இளம்பூரணர். எ.டு. வாழி யாதன் வாழி (ஐங்குறு )ே என்றும், எங்கோ வாழிய குடுமி (புறம் 3) என்றும இவ்வாறு வ வழி, ஆண்டு வரும் மன நிகழ்ச்சி மெய்ப் பாடம். அஃதேல் வைதலும் மெய்ப்பாடாதல் வேண்டும் எனின், அது வெகுட்சியின் முதிர்வு. இஃது அன்பின் முதிர்வு ஆகாதோ எனின், அன்பின்றியும் அரசன் முதலாயினோரைச் சான்றோர் வாழ்த்துதலின் அடங்காதென்க' என்பர் இளம்பூரணர். (13) காணுதல் என்பது, நானுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் திகழ்ச்சி. காணுதல் என்பதை இளம்பூரணர் தமக்குப் பழி வருவன செய்யாமை என்பர். எ-டு. நானால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் காண்துறவார் காண்ஆன் பவர். என்ற குறளால் (குறள்-1017) இஃது அறியப்படும். (14) துஞ்சல் என்பது, உறக்கம் : அது கடந்து வருகின்றான் கண்ணும் விளங்கத் தோன்றுதலின் அதுவும் மெய்ப்பாடெனப் பட்டது. 57-9. “............ .........முனிவின்றி கனங்தலை யுலகமுங் துஞ்சும்.”